Director Shankar: பாழும் கிணற்றில் விழுந்த மகள்.. நொந்து போன ஷங்கர்.. இரண்டாவது திருமணம் ஏன்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Shankar: பாழும் கிணற்றில் விழுந்த மகள்.. நொந்து போன ஷங்கர்.. இரண்டாவது திருமணம் ஏன்?

Director Shankar: பாழும் கிணற்றில் விழுந்த மகள்.. நொந்து போன ஷங்கர்.. இரண்டாவது திருமணம் ஏன்?

Kalyani Pandiyan S HT Tamil
Published Feb 26, 2024 06:00 AM IST

அங்கு அவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பெண், அந்த அகாடமியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார்கள் என்ற புகாரை, அங்குள்ள ஒரு பெரிய மனிதரிடம் சொல்லுகிறார்.

இயக்குநர் ஷங்கர்!
இயக்குநர் ஷங்கர்!

அவர் பேசும் போது, “  ரோஹித் தரப்பு பெரிய கோஸ்வர குடும்பம். அதனை நம்பிதான் ஷங்கர் தரப்பு பெண்ணை கொடுத்து இருக்கிறது. அவர்களுக்கு புதுச்சேரியில் ஒரு கிரிக்கெட் அகாடமி, மதுரையில் ஒரு கிரிக்கெட் அகாடமி இருக்கிறது. அந்த அகாடமியில் சிறுமி ஒருவர் பயிற்சி எடுப்பதற்காக வந்திருக்கிறார். 

அங்கு அவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் நடந்திருக்கிறது. இதனையடுத்து அந்த பெண், அந்த அகாடமியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தார்கள் என்ற புகாரை, அங்குள்ள ஒரு பெரிய மனிதரிடம் சொல்லுகிறார். 

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த பெரிய மனிதர் மாணவியின் பெற்றோரை அழைத்து சமரசம் பேச முயற்சி செய்கிறார். அப்போது உங்கள் மகள் ரஞ்சி டிராஃபி, ஐபிஎல், இந்திய அணி ஆகியவற்றில் நிச்சயம் விளையாடுவாள்அதற்கான எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்று  உறுதி கொடுக்கிறார். 

ஆனால் பெண்ணினுடைய பெற்றோரால் தனது குழந்தைக்கு நேர்ந்த அந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

காரணம் அந்த பெண் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்தில் பெண் தரப்பு புகார் ஒன்றை அளிக்கிறது. இதனையடுத்து அவர்கள் களத்தில் இறங்கி விசாரிக்கும் பொழுது, ஒவ்வொருவராக வலையில் சிக்குகிறார்கள்.

அப்போதுதான் ஷங்கர் உடைய முன்னாள் மாப்பிள்ளை ரோஹித்தும் சிக்குகிறார். போக்சோ சட்டம் உள்ளே இறங்குகிறது. அதன் பின்னர் தான் தெரிகிறது அந்த ரோஹித் என்பவர் மிக மிக மோசமானவர் என்று... ஆறு மாதங்களாக ஷங்கர் மகள் ரோஹித் உடன் எப்படி குடும்பம் நடத்தினார் என்று தெரியவில்லை. 

இந்த சம்பவத்தால் மனம் நொந்து போனார் ஷங்கர். இருந்தாலும் பெண்ணை கொடுத்து விட்டோமே என்ற காரணத்திற்காக, அவரை காப்பாற்றும் முயற்சியில் கூட ஷங்கர் இறங்கினார். ஆனால் ஷங்கரின் மகளோ அவரை திட்டி இனி அவருடன் நான் வாழ மாட்டேன் என்று உறுதியாக சொல்ல, அதன் பின்னர் அவருக்கு மறுமணம் நடந்திருக்கிறது” என்று பேசினார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.