‘அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி!
படம் முடிந்த பின்னர் என்னால் பேசவே முடியவில்லை. காரணம், படத்தின் முடிவு அப்படி இருந்தது. - சேத்தன் மனைவி

அவர் வந்தா வீட்டுக்கதவை திறக்க மாட்டேன்.. இவ்வளவு மோசமாவா நடிக்கிறது’ - தேவ தர்ஷினி
சென்னையில், விடுதலை பாகம் 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த சேத்தனும், அவரது மனைவி தேவ தர்ஷினியும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அவர்களிடம் சேத்தன் மனைவி தேவ தர்ஷினி பேசும் போது, 'படம் மிகவும் பிரமாண்டமாக வந்திருக்கிறது. நானும், என்னுடைய மகளும் என் கணவர் அருகிலேயே உட்கார வில்லை. படத்தில் அந்தளவு மோசமானவராக அவரை காண்பித்து இருக்கிறார்கள். எத்தனையோ வில்லன் ரோல்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால், இதில் சேத்தன் மிகவும் கொடூரமாக நடித்து இருக்கிறார்.
முடிவு அப்படி இருந்தது.
படம் முடிந்த பின்னர் என்னால் பேசவே முடியவில்லை. காரணம், படத்தின் முடிவு அப்படி இருந்தது.