போக்குவரத்து தீவிற்கு கே பாலசந்தர் பெயர்! உத்தரவு போட்ட ஸ்டாலின்! உடனடியாக நடந்த திட்டம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போக்குவரத்து தீவிற்கு கே பாலசந்தர் பெயர்! உத்தரவு போட்ட ஸ்டாலின்! உடனடியாக நடந்த திட்டம்!

போக்குவரத்து தீவிற்கு கே பாலசந்தர் பெயர்! உத்தரவு போட்ட ஸ்டாலின்! உடனடியாக நடந்த திட்டம்!

Suguna Devi P HT Tamil
Dec 27, 2024 11:20 AM IST

ஏதேனும் ஒரு துறையில் பெரிய சாதனை படைத்தவர்களின் பெயர்களை சாலைக்கோ, ஊருக்கோ, இடத்திற்கோ வைப்பது உண்டு. அந்த வரிசையில் தற்போது இயக்குனர் இமயம் கே. பாலசந்தரின் பெயரை ஒரு போக்குவரத்து தீவிற்கு வைத்துள்ளது

போக்குவரத்து தீவிற்கு கே பாலசந்தர் பெயர்! உத்தரவு போட்ட ஸ்டாலின்! உடனடியாக நடந்த திட்டம்!
போக்குவரத்து தீவிற்கு கே பாலசந்தர் பெயர்! உத்தரவு போட்ட ஸ்டாலின்! உடனடியாக நடந்த திட்டம்!

பெயர்பலகை திறக்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவை அடுத்து சென்னையின் லஸ் சர்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு புதிதாக பெயர் சூட்டப்பட்ட “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” எனப் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார்.பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லாஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு தற்போது இந்த பெயர் சுத்தப்பட்டுள்ளது.

மேலும் நேற்று இது தொடர்பாக லஸ் சர்ச் சாலையில் விழாவு நடைபெற்றது அதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, துணை மேயர்மகேஷ்குமார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், ஆணையாளர் குமரகுருபரன் ஐஏஎஸ், மண்டலக் குழுத் தலைவர் மதன்மோகன், மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி, இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரைப்பிரபலங்கள்

மேலும் நடிகர்கள் சங்க நிர்வாகிகள் நடிகர் ராஜேஷ். பாபு, முகமது இலியாஸ், நடிகர் பூவிலங்கு மோகன், தசரதி. ஒளிப்பதிவாளர் விக்ரமன், தமிழ்நாடு இயக்குநர் சங்கப் பொதுச் செயலாளர் மற்றும் இயக்குநர் பேரரசு, பொருளாளர் சரண், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்/தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் மங்கை அரிராஜன், சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் சிவன் சீனிவாசன், திரையுலகப் பிரமுகர்கள்/நடிகர்கள் எஸ்.வி.சேகர், நாகேஷ் ஆனந்த்பாபு, நடிகை காயத்ரி ரகுராம், திரைப்பட இயக்குநர்கள் வசந்த், நாகா மற்றும் கலை இயக்குநர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிக எக்ஸ் தளத்தில், “ பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) புதிதாக பெயர் சூட்டப்பட்ட ”இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு பெயர்ப்பலகையினை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்தார்” எனக் குறிப்பிட்டு அந்த வீடியோவினையும் பகிர்ந்து இருந்தது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.