ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு.. கோர்ட்டுக்கு வராத ஆர்த்தி.. பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன நீதிமன்றம்..
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சமரச தீர்வு மையத்தில் இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். 2009 ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு
இந்த வழக்கில் பங்கேற்க நடிகர் ஜெயம் ரவி நீதிமன்றத்தில் நேரில் ஆஜாரானார். ஆனால், ஆர்த்தி காணொலி காட்சி மூலமாகவே ஆஜாரானார். பின் இரு தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி ஜெயம் ரவியும் ஆர்த்தியும் இருவருக்கும் இடையான பிரச்சினை தொடர்பாக குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றைய தினமே பேச வேண்டும். அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மக்கள் விருப்ப நாயகனாக மாறிய ஜெயம் ரவி
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜெயம் ரவி. இவரது அண்ணன் ராஜா தமிழில் முன்னணி திரைப்பட இயக்குநர். இவரது தந்தை புரொடியூசர். இப்படி இருக்க கொஞ்சம் கொஞ்சமாக தனது நடிப்பின் மூலம் மக்களைக் கவர்ந்தார் ஜெயம் ரவி.