தமிழ் சினிமா ரீவைண்ட்: கிரிக்கெட்டை மையப்படுத்தி சூப்பர் ஹிட்டான படம்.. ஏப்ரல் 27 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: கிரிக்கெட்டை மையப்படுத்தி சூப்பர் ஹிட்டான படம்.. ஏப்ரல் 27 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

தமிழ் சினிமா ரீவைண்ட்: கிரிக்கெட்டை மையப்படுத்தி சூப்பர் ஹிட்டான படம்.. ஏப்ரல் 27 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 27, 2025 05:45 AM IST

ஏப்ரல் 27ஆம் தேதியில் முந்தைய ஆண்டுகளில் முந்தைய ஆண்டுகளில் பெரிய ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த நாளில் வெளியாகி கவனம் ஈரத்த சில படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

கிரிக்கெட்டை மையப்படுத்தி சூப்பர் ஹிட்டான படம்.. ஏப்ரல் 27 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
கிரிக்கெட்டை மையப்படுத்தி சூப்பர் ஹிட்டான படம்.. ஏப்ரல் 27 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்

சென்னை 600028

வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், நிதின் சத்யா, விஜயலட்சுமி, சம்பத் ராஜா உள்பட பலர் நடித்து ஸ்போர்ட்ஸ் காமெடி பாணியில் உருவாகியிருந்த சென்னை 600028 படம் 2007இல் வெளியானது. இந்த ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறிய நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி இந்த படம் வெளியானது. சென்னையில் உள்ள இரண்டு டென்னிஸ் பால் கிரிக்கெட் அணிகளை மையப்படுத்திய, நட்பு, காதல், விரோதம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கம்ப்ளீட் பேக்கேஸ் ஆக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஹிட்டானது.

தமிழில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி வெளியான முதல் முழு நீள படமாகவும் அமைந்திருந்தது. தொடக்கம் முதல் க்ளைமாக்ஸ் வரை ரசிக்கும்படியான காட்சிகளுடன் இருந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை குவித்த இந்த படம் பின்னர் பெங்காலி, சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகியதோடு, பின்னணி இசையும் பட்டைய கிளப்பும் விதமாக அமைந்தன. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி 2016இல் ரிலீசானது

தியா

ஏ.எல். விஜய் இயக்கத்தில் சாய் பல்ல்வி, நாக செளரியா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க திகில் படமாக உருவாகியிருந்த தியா 2018இல் ரிலீசானது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. இருப்பினும் யூகிக்ககூடியதாக இருந்த திரைக்கதை காரணமாக படம் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கவனம் ஈரத்தது.

மருதுபாண்டி

மனோஜ் குமார் இயக்கத்தில் ராம்கி, சீதா, நிரோஷா, நாசர் உள்பட பலர் நடித்து ஆக்சன் ட்ராமா பாணியில் உருவாகி 1990இல் வெளியான படம் மருதுபாண்டி. ராம்கிக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த இந்த படம் பின்னாளில் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

முதலில் இந்த படத்தின் கதையில் நடிக்க சத்யராஜிடம் கேட்கப்பட்டது. ஆனால் அவர் நடிக்க மறுக்கவே, ராம்கியிடம் சென்றுள்ளது. ஆக்சன், எமோஷன் கலந்த சிறப்பான நடிப்பை ராம்கி வெளிபடுத்து படமும் ஹிட்டானது. பார்த்து பழகிய கதையாக இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதை படத்தை ரசிக்கும்படியாக வைத்துள்ளது என விமர்சிக்கப்பட்டது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.