Top 10 Cinema: 'விடாமுயற்சி ஸ்பெஷல் ஷோ முதல் உதித் நாராயண் கிஸ் வரை' இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்
Top 10 Cinema: விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி முதல் உதித் நாராயணை விடாமல் வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ் வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளைப் பார்க்கலாம்.

Top 10 Cinema: விடாமுயற்சி படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி முதல் உதித் நாராயணை விடாமல் வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ் வரை இன்றைய டாப் 10 சினிமா செய்திகளைப் பார்க்கலாம்.
ஸ்பெஷல் ஷோக்கு கிரீன் சிக்னல்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார்- த்ரிஷா நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், நாளை 'விடாமுயற்சி' படத்தின் சிறப்பு காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை 5 காட்சிகள் நாளை மட்டும் திரையிடப்பட உள்ளது.
விடாமுயற்சி 3வது சிங்கிள்
அஜித் குமார்- த்ரிஷா நடிப்பில் நாளை வெளியாகவுள்ள விடாமுயற்சி படத்தின் 3வது சிங்கிள் தனியே எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடலை அவரே பாடியுள்ளார். நாளை படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இன்று பாடல் ரிலீஸ் ஆனதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
2கே லவ் ஸ்டோரி 4வது சிங்கிள்
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 2கே லவ் ஸ்டோரி படத்தின் 4வது சிங்கிளான எதுவரை உலகமோ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. புதுமுக நடிகர் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சிட்டி லைன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. காதல், நட்பு என வாழ்க்கையை கொண்டாடும் இளம் தலைமுறை பற்றிய படமாக இது உருவாகி வருகிறது.
சித்தார்த் 40
தமிழில் சில முக்கிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர் சித்தார்த் தற்போது அவரது 40வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 8 தோட்டோக்கள், குருதியாட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் சித்தார்த்தின் 40வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் மீதா ரகுநாத், சரத் குமார், தேவயானி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மீண்டும் ஆசைப்படும் அருண் விஜய்
என்னை அறிந்தால் படம் மூலம் கம்பேக் கொடுத்து ஹிட் அடித்து வரும் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது மீண்டும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். என்னை அறிந்தால் படத்தில் ஸ்டைலிஸான வில்லனாக வந்து கலக்கிய அருண் விஜய், நாளை விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.
உருகிய ராஜ்குமார் பெரியசாமி
அமரன் பட இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி, இயக்குநர் மணிரத்னத்தை சந்தித்ததை புகைப்படமாக வெளியிட்டு உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் அமரன் வெளியாகி 100 நாட்கள் ஆக போகிறது. நான் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டதற்கு காரணமே நீங்கள்தான் மணிசார். 2005ல் முதல்முதலாக உங்களுடன்தான் புகைப்படம் எடுக்க நினைத்தேன். ஆனால் அதற்கு 25 வருடங்கள் ஆனது. இந்த தருணத்தில் நான் திகைத்துப் போயுள்ளேன். அமரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி மணிசார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூராசிக் வேர்ல்டு ரீபெர்த்
உலகளாவிய ரசிகர்களைக் கொண்டுள்ள ஜூராசிக் வேர்ல்டு திரைப்படத்தின் புதிய பாகமான ஜூராசிக் வேர்ல்டு ரீபெர்த் படத்தின் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அவெஞ்சர்ஸ் படத்தின் கதாநாயகியான ஸ்கார்லெட் ஜோன்யன் நடித்துள்ளார்.
மார்வெலை வம்பிழுக்கும் புஷ்பா ஃபேன்ஸ்
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம், வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், ஓடிடியிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் புஷ்பா 2 படத்தைப் பார்த்து, அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை உருவாக்கும் மார்வெல் நிறுவனத்தை பலர் விமர்சித்து வருகின்றனர்.
கணவரை வாழ்த்திய ஐஸ்வர்யா ராய்
நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பற்றிய விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில், அவர் சமூக ஊடகங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஐஸ்வர்யா ராய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அபிஷேக்கின் 49 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து, நடிகரின் அரிய குழந்தை பருவ படத்தைப் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உதித்தை விடாமல் துரத்தும் நெட்டிசன்ஸ்
பாடகர் உதித் நாராயண் சமீபத்தில், ரசிகையை உதடுகளில் முத்தமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனங்களை சந்தித்தார். இப்போது, அவர் பல ரசிகைகளை முத்தமிடுவது போன்ற மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை ஷேர் செய்த ரசிகர்கள் அவர் கட்டுப்படுத்த முடியாதவர் என கிண்டலடித்துள்ளனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்