Ninaithen Vandhai: எழிலை கடுப்பாக்கிய சுடர்.. கோபத்தை கொட்டும் குழந்தைகள் - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்
Ninaithen Vandhai Tv Serial: எழிலை கடுப்பாக்கிய சுடர், கோப்பத்தை கொட்டும் குழந்தைகள் என நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் பரபரப்பான காட்சிகளுடன் செல்ல இருக்கின்றன.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் பாட்டு பாடி கொண்டே குளிக்க, எழில் அதை கேட்டு கடுப்பான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
சுடர் எழில் இடையே நடக்கும் மோதல்
அதாவது, சுடர் சீக்கிரம் வெளியே வா எனக்கு லேட்டாகுது என்று சொல்லி எழில் சத்தம் போட அவள் என்னால் உங்க ரூல்ஸ் எல்லாம் பாலோ பண்ண முடியாது. என் இஷ்டத்துக்கு குளிச்சிட்டு தான் வருவேன் என்று தாமதப்படுத்துகிறாள்.
அதை தொடர்ந்து அஞ்சலி சுடருக்கு ஜூஸ் மற்றும் கேக் கொண்டு வர எழில் அது யாருக்கு என்று கேட்டு அதை வாங்கி சாப்பிட்டு விட்டு சுடருக்கு எதையும் கொடுக்க கூடாது என்று சொல்லி விட்டு கிளம்பி செல்கிறான். அடுத்ததாக சுடர் குழந்தைகளை சீக்கிரம் ரெடியாக சொல்ல அஞ்சலியை தவிர்த்து மற்ற 3 பேரும் கோபமாக பேச சுடர் வருத்தமடைகிறாள்.
இந்துவுக்கு ஏற்படும் கவலை
அதே போல் இதையெல்லாம் தூரத்தில் இருந்து கேட்ட இந்துவும் வருத்தமடைகிறாள், குழந்தைகள் ஏன் சுடரை புரிந்து கொள்ளவில்லை என்று கவலை அடைகிறாள். அதன் பிறகு சுடர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொண்டு போவதாக சொல்ல, கனகவல்லி மனோகரியும் செல்வியும் குழந்தைகளுக்கு சாப்பாடு கொண்டு போகட்டும் நீ எழிலுக்கு எடுத்துட்டு போ என்று சொல்கிறாள்.
இதை கேட்டு சுடர் நானா என்று ஷாக்காக மனோகரி நான் கொண்டு போகட்டுமா என்று கேட்க கனகவல்லி சுடர் போகட்டும் என்று உறுதியாக சொல்கிறாள். பிறகு சுடர் சாப்பாடு கொண்டு வர எழில் எனக்கு வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.
பீலிங் ஆகும் எழில்
இதனால் வேறு இரண்டு டாக்டர்கள் நாங்க சாப்பிடுறோம் என்று சாப்பிட்டு விட்டு சுடரின் சமையலை பாராட்டி தள்ள எழில் சாப்பாட்டை மிஸ் பண்ணிடோமோ என்று பீல் ஆகிறான்.
டாக்டர்கள் சாப்பாடு சூப்பர் என்று திரும்ப திரும்ப பேச எழிலின் வருத்தம் அதிகமாகி கொண்டே செல்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
நினைத்தேன் வந்தாய் தொடர்
ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் நூறெல்லா சாவாசம் என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் நினைத்தேன் வந்தாய். கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன், அபிராமி வெங்கடாச்சலம் முறையே எழில் மற்றும் சுடர் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதுவரை 150க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
பின்னணி கதை
மனைவி இந்துமதியின் மரணத்திற்குப் பிறகு எழில் மனமுடைந்து இருக்கிறார். கிராமத்து பெண்ணான சுடர்விழி, அவரது குழந்தைகளின் பராமரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். ஆனால் எழில் மற்றும் அவரது குழந்தைகளின் இதயங்களில் உள்ள வெற்றிடத்தை சுடர்விழி நிரப்புகிறாரா என்பது தான் இந்த சீரியலின் கதையாக அமைந்துள்ளது.
ஜீ5 ஓடிடி தளத்தில் இந்த சீரியல் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது.