தமிழ் சினிமா ரீவைண்ட்: ராஜ்கிரண் எதார்த்த நடிப்பு.. சீலிப்பர் ஹிட்டான படம்.. ஜூன் 6 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்
ஜூன் 6ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஜூன் 6, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் விமல் நடித்த மஞ்சப்பை, பிரகாஷ் ராஜ் நடித்த உன் சமையல் அறையில், கிளாசிக் ஹிட் படமான கண்ணே பாப்பா போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
மஞ்சப்பை
புதுமுக இயக்குநர் என். ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2014இல் ரிலீசான படம் மஞ்சப்பை. கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வரும் ராஜ்கிரண் அங்குள்ள வாழ்க்கை முறையில் இணைத்து கொள்ள முடியாமலும், அதே சமயத்தில் அவர் அடிக்கும் லூட்டிகளும் படத்தின் கதை.
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களமாக அமைந்திருந்த இந்த படம் ஹிட்டாகி வசூலையும் குவித்தது. படத்தில் ராஜ்கிரணின் எதார்த்தமான நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த படம் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது. ரகுநந்தன் இசையில் படத்தின் பாடல்கள் படம் ரிலீஸ் சமயத்தில் வரவேற்பை பெற்றன. வழக்கமான படங்களுக்கு மத்தியில் வித்தியாச கதையமசத்தில் ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை தரும் படமாக மஞ்சப்பை இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகின. சீலிப்பர் ஹிட்டான இந்த படம் நல்ல வசூலையும் குவித்தது.