தமிழ் சினிமா ரீவைண்ட்: ஹீரோ இல்லாமல் தேசிய விருதை வாங்கிய படம்.. ஜூன் 5 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தமிழ் சினிமா ரீவைண்ட்: ஹீரோ இல்லாமல் தேசிய விருதை வாங்கிய படம்.. ஜூன் 5 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

தமிழ் சினிமா ரீவைண்ட்: ஹீரோ இல்லாமல் தேசிய விருதை வாங்கிய படம்.. ஜூன் 5 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 05, 2025 06:00 AM IST

ஜூன் 5ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ஹீரோ, முன்னணி நடிகர்கள் நடிக்காமல் வெளியாக தேசிய விருது வென்ற காக்கா முட்டை படம் வெளியாகியுள்ளது. இது தவிர இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

தமிழ் சினிமா ரீவைண்ட்: ஹீரோ இல்லாமல் தேசிய விருதை வாங்கிய படம்.. ஜூன் 5 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
தமிழ் சினிமா ரீவைண்ட்: ஹீரோ இல்லாமல் தேசிய விருதை வாங்கிய படம்.. ஜூன் 5 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்

காக்கா முட்டை

எம். மணிகண்டன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிறுவர்களான ஜே. விக்னேஷ், வி. ரமேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த காமெடி ட்ராமா பாணியில் உருவாகி 2015இல் ரிலீசான படம் காக்கா முட்டை. சேரி பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள் பிட்சா சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவதும், அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பதன் பயணமும் தான் படத்தின் கதை.

எதார்த்தமான காட்சிகளுடன், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அப்போது நிலவிய அரசியல் உள்பட பல்வேறு விஷயங்களை பேசிய இந்த படம் பிரபலமான நடிகர்கள் இல்லாத போதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் பல்வேறு உலக திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்தது.

சிறந்த குழந்தைகள் படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என தேசிய விருதுகளை வென்ற இந்த படம் ஃபிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் விருதுகளையும் பெற்றது. ஹீரோ என்ற கதாபாத்திரம் இல்லாமல் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக கோடிகளில் படம் வசூலை அள்ளியது. தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான உண்டர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த இந்த படத்தில் சிம்பு கேமியோ கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

மாயாண்டி குடும்பத்தார்

மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் இயக்கத்தில் மணிவண்ணன், சீமான், தருண் கோபி, பொன் வண்ணன், பூங்கொடி உள்பட பலர் நடித்து குடும்ப திரைப்படமாக உருவாகி 2009இல் ரிலீசான படம் மாயாண்டி குடும்பத்தார். மதுரை பின்னணியில் முழுக்க முழுக்க அண்ணன் - தம்பி இடையிலான உறவை மையைப்படுத்து உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் கவர்ந்து ஹிட்டானது. படத்தில் 10 இயக்குநர்கள் அண்ணன், தம்பிகளாக நடித்திருப்பார்கள். இதில் அனைவரது நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது.

இயக்குநர் தருண் கோபி கதையின் நாயகனாகவும், பூங்கொடி கதையின் நாயகியாகவும் தோன்றியிருப்பார்கள். பாசப்போரட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக ஏராளமான காட்சிகள் இடம்பிடித்து பார்வையாளர்கள் கண்ணீரை சிந்த வைத்த படமாக இருந்தது.

கடல் மீன்கள்

ஜி.என். ரங்கராஜன் இயக்கத்தில் கமல்ஹாசன், சுஜாதா, நாகேஷ், ஸ்வப்னா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து மசாலா படமாக உருவாகி 1981இல் ரிலீசான படம் கடல் மீன்கள். மலையாள படமான மீன் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் தமிழிலும் ஹிட்டானது.

வழக்கமான பழிக்கு பழி கதையாக இருந்தாலும் கமல், சுஜாதாவின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இளையராஜா இசையில் படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. கண்ணதாசன் பாடல் வரிகள் எழுதிய தாலாட்டுதே வானம் என்ற பாடல் இன்று வரையிலும் சிறந்த மெலடியாக ஒலித்து வருகிறது.

இந்த படங்கள் தவிர அர்ஜுன் இயக்கி நடித்து குஷ்பூ ஹீரியினாக நடித்த போலீஸ் கதையாக சேவகன், பி. வாசு இயக்கத்தில் கார்த்தி மற்றும் குஷ்பூ இணைந்து நடித்த இது நம்ம பூமி ஆகிய படங்கள் 1992இல் இதே நாளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஹிட்டாகின.