தமிழ் சினிமா ரீவைண்ட்: ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஹிட் படங்கள்.. ஜூன் 4 முந்தையை ஆண்டுகளில்ல ரிலீஸான படங்கள்
ஜூன் 4ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், விஜயகாந்த் நடித்த கிளாசிக் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

ஜூன் 4, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில். விஜயகாந்த் நடித்த கூலிக்காரன், ரஜினிகாந்த் நடித்த அன்புக்கு நான் அடிமை, கமல்ஹாசன் நடித்த ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
கூலிக்காரன்
ராஜசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், ரூபினி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகி 1987இல் ரிலீசான படம் கூலிக்காரன். இந்த படத்தில் தான் நடிகை ரூபனி கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.
இந்தியில் அமிதாப் பச்சன் நடித்து சூப்பர் ஹிட்டான காலியா படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் இருந்து தான் விஜயகாந்தின் பெயருக்கு முன் புரட்சி கலைஞர் என பெயர் டைட்டில் கார்டில் இடம்பிடித்தது.