தமிழ் சினிமா ரீவைண்ட்: ரசிகர்களை கவர்ந்த த்ரில்லர், பேமிலி ட்ராமா.. மே 3 முந்தைய ஆண்டுகளில் ரலீசான படங்கள் லிஸ்ட்
மே 3ஆம் முந்தைய ஆண்டுகளில் முன்னணி ஹீரோக்கள் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈரத்த த்ரில்லர், பேமிலி ட்ராமா படங்கள் பற்றி ரீவைண்ட் செய்து பார்க்கலாம்

மே 3, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சமீபத்தில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா நடித்த வருஷமெல்லாம் வசந்தம், அருள்நிதி நடித்த கே-13 போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சிவாஜி கணேசன் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த கிளாசிக் படங்களான பொம்மை கல்யாணம், நேர்மை ஆகிய படங்கள் வெவ்வேறு ஆண்டுகளில் மே 3ஆம் தேதி வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
வருஷமெல்லாம் வசந்தம்
இயக்குநர் விக்ரமன் உதவியாளர் ரவிஷங்கர் இயக்கத்தில் மனோஜ் கே பாரதி, குணால், அனிதா ஹசானந்தனி உள்பட பலர் நடித்து காதல், காமெடி கலந்த படமாக 2002இல் ரிலீசான படம் வருஷமெல்லாம் வசந்தம். கிராமத்து பின்னணியில் காதல், குடும்ப உறவுகளை மையப்படுத்தியிருந்த படத்தின் கதை கிராமப்பகுதியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் மனோஜ் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தில் மயில்சாமி சோலோ காமெடியில் கலக்கியிருப்பார்.