Tamil Movies: ஜெமினி கணேசன் இயக்குநர் அவதாரம்,ரசிகர்கள் மறக்க முடியாத சிந்து சமவெளி - இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies on Sep 3: ஜெமினி கணேசன் இயக்குநர் அவதாரம் எடுத்த இதய மலர், தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத சிந்து சமவெளி உள்பட செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று இன்று வெளியான தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று தமிழில் சூப்பர் ஹிட்டான கிளாசிக் படங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் தவிர டாப் ஹீரோக்களின் படங்கள் இந்த நாளில் வெளியாகவில்லை. 1940களில் இருந்து தற்போது வரை செப்டம்பர் 3இல் வெளியான முக்கிய தமிழ் படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.
மங்கையர்கரசி
தமிழ் சினிமாவின் சிறந்த கிளாசிக் படங்களில் ஒன்றாக இருப்பது மங்கயரக்கரசி. பி.யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா, அஞ்சலி தேவி நடித்த இந்த படத்தை ஜித்தன் பேனர்ஜி இயக்கியிருப்பார். தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட கோலபாமா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக மங்கயர்கரசி உருவாகி தமிழிலும் வெற்றி பெற்றது. தெலுங்கில் நடித்த ரோலில் அஞ்சலி தேவி தமிழ் பதிப்பிலும் நடித்திருப்பார். படத்தின் பி.யு. சின்ன்ப்பா மூன்று ரோலிலும், காமெடியன் என்.எஸ்.கே டபுள் ரோலிலும் நடித்திருப்பார்கள். படத்தின் கண்ணாம்மா நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. சிறந்த சூப்பர் ஹிட் கிளாசிக் பிளாக் அண்ட் படமான மங்கையர்கரசி வெளியாகி இன்றுடன் 75 ஆண்டுகள் ஆகிறது.
சரஸ்வதி சபதம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஏ.பி. நாகராஜன் கூட்டணியில் வெளியான சிறந்த புராண படம் சரஸ்வதி சபதம். புலமைப்பித்தன் நாவல் வக்கும் வக்கும் என்பதை அடிப்படையாக கொண்ட இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, பத்மினி, தேவிகா, கே.ஆர். விஜயா, நாகேஷ், சிவகுமார், மனோரமா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பார்கள்.
