Tamil Movies Rewind: சிம்புவின் முதல் ஹிட்.. மாதவனின் ரொமாண்டிக் படம்.. ஏப்ரல் 13இல் ரிலீசாகி ஹிட்டடித்த படங்கள் லிஸ்ட்
தமிழ் புத்தாண்டு நாளுக்கு முந்தைய தேதியான ஏப்ரல் 13இல் ஒவ்வொரு ஆண்டும் தொடர் விடுமுறையை குறிவைத்து ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. 2025க்கு முந்தைய ஆண்டுகளில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படங்கள் பற்றி சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்

ஏப்ரல் 13, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் எம்ஜிஆரின் மதுரைவீரன், சிவாஜி கணேசனின் தெயவப்பிறவி, ரஜினிகாந்த் - பிரபு நடித்த குரு சிஷ்யன், கமல்ஹாசன் நடித்த சிங்காரவேலன், மாதவன் நடித்த டும் டும் டும், சிம்பு நடித்த தம் போன்ற பல்வேறு ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
மதுரை வீரன்
டி. யோகானந்த் இயக்கத்தில் கண்ணதாசன் திரைக்கதை எழுத எம்ஜிஆர், பானுமதி, பத்மினி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து 1986இல் வெளியான படம் மதுரை வீரன். எம்ஜிஆருக்கு சில்வர் ஜூப்ளி படமாக அமைந்த இந்த படம் 200 நாள்களுக்கு மேல் ஓடியது. இந்த படத்தின் மொத்த வசூல் ரூ. 1 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது
தெய்வப்பிறவி
கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி பிரதான கதாபாத்திரத்தில் நடித்து குடும்ப திரைப்படமாக 1960இல் வெளிவந்த படம் தெய்வப்பிறவி. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படம் தேசிய விருதை வென்றது. படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றது
மேலும் படிக்க: ஹாட்ரிக் ஹிட் கொடுத்த விஜய்.. மாஸ் ஹீரோவாக ஜொலித்த விக்ரம்
குரு சிஷ்யன்
எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, கெளதமி, சீதா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் ட்ராமா பாணியில் 1988இல் வெளியான படம் குரு சிஷ்யன். இந்தியில் ஹிட்டான இன்சாஃப் கி புகார் படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. எம்ஜிஆர் இறப்புக்கு பின்னர் தமிழ்நாடு அரசியில் நிலவி வந்த சூழ்நிலைகளை பிரதிபலிக்கும் விதமாக படத்தின் சில ரெபரன்ஸ் இடம்பிடித்திருந்தது
சிங்காரவேலன்
ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கமல்ஹாசன், குஷ்பூ நடித்து ரொமாண்டிக் காமெடி பாணியில் உருவாகி 1992இல் வெளியாகி ஹிட்டான படம் சிங்காரவேலன். தமிழ் சினிமாவின் கல்ட் அந்தஸ்து பெற்ற கதையாக அமைந்தது. இளையராஜா இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி வரவேற்பை பெற்றன. கமலுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்த படமாக சிங்காரவேலன் உள்ளது
டும் டும் டும்
அழகம் பெருமாள் இயக்கத்தில் மாதவன், ஜோதிகா நடித்து ரொமாண்டி் காமெடி படமாக 2001இல் வெளியான படம் டும் டும் டும். பாசிடிவான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது.
கிராமத்து பின்னணியில் அமைந்திருந்த இந்த காதல் கதை புதுவித அனுபவத்தை தரும் விதமாக அமைந்திருந்தது. கார்த்திக் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்ட பாடல்களாக அமைந்தன்
மேலும் படிக்க: Tamil Movies Rewind: எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படம்
தம்
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சிம்பு, ரக்சிதா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்சன் திரைப்படமாக 2003இல் வெளியாகி ஹிட்டான படம் தம்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான அப்பு படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்த படம் சிம்புக்கு முதல் ஹிட்டாக அமைந்தது. விறுவிறுப்பான திரைக்கதை. மாஸ்ஸான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
