தமிழ் சினிமா ரீவைண்ட்: சூர்யா - செல்வராகவன் காம்போவின் அரசியல் படம்.. மே 31 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள் லிஸ்ட்
மே 31ஆம் தேதி முந்தைய ஆண்டுகளில் சூர்யா, சரத்குமார், கமல்ஹாசன், மோகன் போன்ற ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளன. இந்த நாளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த இந்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

மே 31, 2025க்கு முன், இதே தேதியில் முந்தைய ஆண்டுகளில் சூர்யா நடித்த என்ஜிகே, தமன்னா கதையின் நாயகியாக நடித்த தேவி 2, சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன், கமல்ஹாசன் நடித்த அந்த ஒரு நிமிடம், மோகன் நடித்த தென்றலே என்னை தொடு, விஜயகாந்த் நடித்த டெளரி கல்யாணம் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இந்த படங்கள் பற்றிய சுவாரஸ்ய விஷயங்களை ரீவைண்ட் செய்து பார்க்கலாம்
என்ஜிகே
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல்பிரீத் உள்பட பலர் நடித்து அரசியல் ஆக்சன் திரைப்படமாக உருவாகி 2019இல் ரிலீசான படம என்ஜிகே. மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியிலும் கலவையான உணர்வை வெளிப்படுத்தியது. செல்வராகவனின் அரசியல் பாணியிலான திரைக்கதை வித்தியாசமாக இருந்ததுடன், படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. தென் கொரியா நாட்டில் ரிலீசான முதல் தமிழ் படம் என்ற பெருமையும் என்ஜிக படத்துக்கு உள்ளது.
