HBD Charuhasan: 'உலக நாயகனின் உடன்பிறப்பு.. நடிப்புன்னு வந்தா தீ நெருப்பு' சாந்தத்துக்கு பேர் போன சாருஹாசன்!
விஜய்ஶ்ரீ இயக்கத்தில் வயதான தாதாவாக 87 வயதில் லீடு ரோலில் நடித்தார். தற்போது தனது 93 வயதில் அவரின் இயக்கத்திலேயே 'ஹரா' எனும் படத்தில் மோகன், குஷ்பூ, யோகிபாபு,சுரேஷ்மேனன் ஆகியோரோடு சேர்ந்து "டான்" கேரக்டரில் நடித்து வருகிறார்.
93 வயது கடந்தும் இன்னும் இளைஞராய் 'டான்' வேடத்தில் நடிக்கும் சாருஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த முக்கிய தகவல்களை திரும்பி பார்க்கலாம் .
பிறப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யில் 1931 ஜனவரி 5 அன்று சீனிவாசன்-ராஜலட்சுமி தம்பதியினருக்கு தலைமகனாக பிறந்தார். அவரது தந்தை காங்கிரஸ் இயக்கத்தோடு இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்டவர். அவரது குருவான யாகூப் ஹாசன் என்பவரின் மீதான மரியாதை காரணமாக அவரது குழந்தைகளுக்கு ஹாசன் என்ற பெயரையும் சேர்த்து வைத்தார். இப்படி தான் ஹாசன் என்ற பெயர் அவர்களேது குடும்பத்தினர் எல்லோரோடும் ஒட்டி கொண்டது.
சிறுவயதில் வீட்டில் இருந்தே படித்து விட்டு நேரடியாக ஐந்தாம் கிரேடு வகுப்பில் சேர்ந்தவர். சட்ட படிப்பை ஆர்வத்தோடு படித்து முடித்தார். இவரின் கடைசி தம்பி தான் உலகநாயகன் கமல்ஹாசன். சாருஹாசன் மகள் சுஹாசினி 1980 காலகட்டத்தில் பிரபல நடிகை. இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களை திருமணம் முடித்தார். சாருஹாசன் குடும்பம் இப்படி திரை உலகின் முக்கியமான குடும்பமாக மாறியது.
சாருஹாசன் 1979 ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த உதிரிப்பூக்கள் படத்தில் அஸ்வினியின் தந்தையாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்கள் என்று தொடர்ந்து நடித்து வந்தார். 1987 ல் கன்னடத்தில் வெளிவந்த 'தபெரனா கதெ' என்ற திரைப்படத்துக்கு சிறந்த நடிகராக தேர்வாகி தேசிய விருது, மாநில விருது கிடைத்தது. தம்பி கமல்ஹாசன் படங்களை விட உச்ச நடிகர் ரஜினியின் பல படங்களில் சாரு ஹாசன் நடித்துள்ளார்.
1953 ல் கோமளம் என்பவரை திருமணம் முடித்தார். சில மாதங்கள் முன்பு 93 வயது சாருஹாசனும் 88 வயது மனைவி கோமளமும் கைகளை கோர்த்த படி வாக்கிங் செல்லும் வீடியோவை அவரது மகள் பதிவிட சோசியல் மீடியாவில் மில்லியன் கணக்கில் வியூஸ் மற்றும் லைக்ஸ் அள்ளியது.
இவர் புதிய சங்கமம், ஐபிசி215 ஆகிய படங்களை இயக்கினார். 2015 ல் 'திங்கிங் ஆன் மை பீட்' என்ற பெயரில் தனது சுயசரிதையை வெளியிட்டார்.
விஜய்ஶ்ரீ இயக்கத்தில் வயதான தாதாவாக 87 வயதில் லீடு ரோலில் நடித்தார். தற்போது தனது 93 வயதில் அவரின் இயக்கத்திலேயே 'ஹரா' எனும் படத்தில் மோகன், குஷ்பூ, யோகிபாபு,சுரேஷ்மேனன் ஆகியோரோடு சேர்ந்து "டான்" கேரக்டரில் நடித்து வருகிறார்.
மனதில் உறுதி இருந்து விட்டால் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்ற உண்மையை நிருபித்து கொண்டிருக்கிறார்.
'உலக நாயகனின் உடன்பிறப்பு.. நடிப்புன்னு வந்தா தீ நெருப்பு' சாந்தத்துக்கு பேர் போன சாருஹாசன் என்ற இந்த இளைஞன் சதம் தாண்டியும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்