HBD Ashish Vidyarthi: முதல் படத்திலேயே தேசிய விருது..! தமிழில் வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ashish Vidyarthi: முதல் படத்திலேயே தேசிய விருது..! தமிழில் வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர்

HBD Ashish Vidyarthi: முதல் படத்திலேயே தேசிய விருது..! தமிழில் வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 19, 2024 01:43 PM IST

மேடை நாடகங்களில் இருந்து சினிமாவில் நுழைந்து முத்திரை பதித்த ஆஷிஷ் வித்யார்த்தி முதல் படத்திலேயே தேசிய விருது வென்றார். தமிழ் சினிமா கண்டெடுத்த பன்முக கலைஞர்களில் ஒருவராக திகழும் இவர் வில்லனாக அறிமுகமாகி ணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவராக உள்ளார்.

தமிழில் வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர்
தமிழில் வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கியவர்

நாடகம் டூ சினிமா

டெல்லியை சேர்ந்த் ஆஷிஷ் வித்யார்த்தி தந்தை மலையாளியாகவும், தாயார் பெங்காலியாகவும் உள்ளார். தேசிய நாடக அகாடமியில் முக்கிய பொறுப்பில் இவரது தந்தை இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே சிறு வயதில் இருந்தே மேடை நாடகம், நடிப்பு பற்றி அறிமுகம் ஆஷிஷ் வித்யார்த்திக்கு கிடைத்துள்ளது.

தேசிய நாடக அகாடமியில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்ற பின்னர் பல்வேறு மேடை நாடக குரூப்களுடன் இணைந்து நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் படத்திலேயே தேசிய விருது

1990களில் மும்பை வந்த இவர், சினிமா வாய்ப்புகளை தேடி நடிகரானார். முதன் முதலில் இவர் நடித்த படம் சர்தார் படேல் வாழ்க்கையை மையப்படுத்தி உருவான சர்தார் என்ற படத்தில் தான். ஆனால் இவரது நடிப்பில் வெளியான முதல் படம் துரோகால்.

தமிழில் கமல்ஹாசன், அர்ஜுன், நாசர் நடிப்பில் வெளியான குருதிப்புனல் படத்தின் ஒரிஜனல் தான் இந்த துரோகால். இதில் இவர் நடித்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் நாசர் நடித்திருப்பார்.

இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆஷிஷ் வித்யார்த்தி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றார். தொடர்ந்து இந்தியில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி முக்கிய நடிகராக உருவெடுத்தார்.

வில்லனாக அறிமுகம்

தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அந்த படத்தில் டிஎஸ்பி சங்கர் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார்.

இந்த படத்துக்கு பின்னர் தமிழில் பாபா, ஏழுமலை, தமிழ், தமிழன் மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்கள் என வில்லனாக மிரட்டினார்.

இதைத்தொடர்ந்து தமிழில் விஜய் நடித்த கில்லி படத்தில் அவரது தந்தையாகவும், போலீஸ் அதிகாரியாகவும் குணச்சித்திர வேடத்தில் கலக்கியிருப்பார்.

வில்லன், குணச்சித்திரம் என மாறி மாறியும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் காமெடி கலந்த வில்லத்தனம் செய்யும் வேடத்திலும் தோன்றியிருப்பார்.

தமிழில் போலீஸ் வேடத்துக்கு பொருந்து போகிற நடிகராகவே ஆஷிஷ் வித்யார்த்தி வலம் வந்துள்ளார்.

ஓடிடி மற்றும் யூடியூப்

சினிமாக்களை போலவே ஓடிடியிலும் பல்வேறு வெப்சீரிஸ், படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார். நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆன ராணா நாயுடு சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

யூடியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் ஆஷிஷ் வித்தியார்த்தி புட் ரிவியூ, டிராவால் விலாக் போன்ற விடியோக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

விவாகரத்து, மறுமணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 60 வயதான ஆஷிஷ் வித்தியார்த்தி தனது முதல் மனைவி ராஜோஷி பருவா என்பவரை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதையடுத்து 33 வயதாகும் தொழிலதிபர் ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஒரு நடிகனாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றவராக இருக்கு ஆஷிஷ் வித்தியார்த்தி, சிறந்த நடிப்புக்காக தேசிய விருது, பிலிம் பேர் விருது, நந்தி விருதுகளை வென்றவராகவும் உள்ளார். தமிழ் சினிமா கண்டெடுத்த பன்முக கலைஞர்களில் ஒருவராக திகழும் ஆஷிஷ் வித்யார்த்திக்கு இன்று பிறந்தநாள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.