Chandramukhi 2: ராகவா லாரன்ஸை விட அதிகமாக சம்பளம் வாங்கிய கங்கனா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Chandramukhi 2: ராகவா லாரன்ஸை விட அதிகமாக சம்பளம் வாங்கிய கங்கனா?

Chandramukhi 2: ராகவா லாரன்ஸை விட அதிகமாக சம்பளம் வாங்கிய கங்கனா?

Aarthi V HT Tamil
Sep 27, 2023 01:33 PM IST

சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருக்கும் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

சந்திரமுகி 2
சந்திரமுகி 2

முன்னதாக இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படக்குழு திடீரென தள்ளி வைத்துள்ளது. இதன் வெளியீடு செப்டம்பர் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடித்து இருக்கும் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி, கங்கனா ரனாவத் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் ரூ 15 கோடியும், வடிவேலு ரூ 2 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளனர்.

ஸ்ருஷ்டி டாங்கேக்கு ரூ. 30 லட்சமும், லட்சுமி மேனனுக்கு ரூ. 25 லட்சமும் பெற்று இருக்கிறார்கள். ராதிகா சரத்குமாருக்கு ரூ.35 லட்சமும், மிதுன் ஷியாமுக்கு ரூ.25 லட்சமும், ராவ் ரமேஷ் வீட்டிற்கு 50 லட்சத்தையும், சுரேஷ் மேனனுக்கு 30 லட்சத்தையும் கொடுத்து இருக்கிறார்கள்.

இப்படத்தை பி வாசு எழுதி இயக்கியுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் பேனரில் சுபாஸ்கரன் அல்லிராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் பின்னணி இசை மற்றும் இசையை எம்.எம்.கீரவாணி அமைத்து உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.