‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?

‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Jan 07, 2025 09:01 AM IST

சந்திரபாபுவிடம் டேய் நீ என்ன இங்கே இருக்கிறாய் என்று கேட்பார். உடனே சந்திரபாபு உன் மீது என் பீச்சாங்கையை வைக்க என்று கூறி சோறு போட்டவன் என்னை மாப்பிள்ளை என்று கூறிக் கொண்டிருக்கிறான், நீ என்ன டேய் என்று கூறுகிறாய் என்று சொல்லி - ஜவஹர்

 ‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?
‘டேய்னா சொல்ற…’கன்னத்தில் அடித்த சந்திரபாபு.. இரத்தம் வந்து துடித்த சிவாஜி.. நிசப்தமான படப்பிடிப்பு!- சம்பவம் தெரியுமா?

சிவாஜியின் என்ட்ரி

இது குறித்து அவர் பேசும், ‘அந்தக்காட்சி எப்படி அமைந்திருக்கும் என்றால், சரோஜாதேவி அழுது கொண்டே இருப்பார். நான் சாப்பிடும் பொழுது எல்லோரும் சிரிப்பார்கள்; ஆனால், இந்த சரோஜாதேவி அழுது கொண்டிருக்கிறார் என்று சந்திரபாபு கேட்கும் பொழுது சிவாஜியின் என்ட்ரி இருக்கும். சிவாஜி காரில் வந்து கொண்டிருப்பார்.

அப்போது சிவாஜி, சந்திரபாபுவிடம் டேய் நீ என்ன இங்கே இருக்கிறாய் என்று கேட்பார். உடனே சந்திரபாபு உன் மீது என் பீச்சாங்கையை வைக்க என்று கூறி சோறு போட்டவன் என்னை மாப்பிள்ளை என்று கூறிக் கொண்டிருக்கிறான், நீ என்ன டேய் என்று கூறுகிறாய் என்று சொல்லி கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விடுவார். அந்த அறை மிக உண்மையாக விழுந்துவிட்டது; அது காட்சி என்பதால் சிவாஜி அப்போது பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை.

கத்தி திட்டினார்

காட்சி முடிந்த உடன், தயாரிப்பாளர் அங்கிருந்து வந்து என்ன பாபு உண்மையில் அடித்து விட்டீர்கள் என்று சொல்லி, பயங்கரமாக கத்தி திட்டினார். உடனே சந்திரபாபு, சார் ஏதோ ஒரு எமோஷனில் அடித்து விட்டேன் என்று கூறினார்.

அதில் அவர் தண்டையார்பேட்டை ரவியை கேள் என்று ஒரு வசனத்தை பேசியிருப்பார். சந்திரபாபு வறுமையில் இருந்த காலங்களில், தண்டையார்பேட்டை என்பவரின் ரவி என்பவரின் வீட்டிற்கு செல்வார்; அவர், அவருக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து பார்த்துக்கொண்டார்;

காலையில் குளிப்பாட்டி கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்து அனுப்புவார். அந்தளவுக்கு சந்திரபாபுக்கு நெருக்கமானவராக இருந்தார். கடைசி வரை தண்டையார்பேட்டை ரவியை சந்திரபாபு விடவே இல்லை; உயிர் நண்பராக வைத்திருந்தார்; அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் அந்த வசனத்தை அவர் பேசியிருந்தார்.’ என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.