தொடர்ந்த செக்ஸ் வீடியோக்கள்.. 18 ஓடிடி தளத்தை ரவுண்டு கட்டி முடித்துவிட்ட மத்திய அரசு!
ஆபாச மற்றும் ஆநாகரீகமான வீடியோக்களை வெளியிட்ட 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளங்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆபாச மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் காட்டியதற்காக 18 ஓடிடி தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தவறாக பயன்படுத்தப்படம் ஓடிடி
ஓடிடி தளங்களின் வருகை பலருக்கும் ஆதாயத்தைக் கொடுத்துள்ளது. ஓடிடி தளத்திர்கு தணிக்கை இல்லாத காரணத்தால் சிலர் இதனை தங்களுக்கு சாதகமான, ஆபாச மற்றும் ஆநாகரீக செயல்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.
மேலும், திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் அதிகப்படியான வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் பொதுவானதாகிவிட்டன. இந்நிலையில், முழுக்க முழுக்க எதிர்மறையான நோக்கத்துடன் செயல்பட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தவிர பல இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன என்று செய்தித்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஓடிடி தளங்கள் முடக்கம்
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை (டிசம்பர் 18) சிவசேனா யுபிடி உறுப்பினர் அனில் தேசாய் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் படி ஓடிடி தளங்கள் மீது சில கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த ஆண்டு மார்ச் 14 அன்று 18 ஓடிடி தளங்கள் முடக்கப்பட்டன. அவை முற்றிலும் ஆபாசமான மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன என்றார்.
விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்
நியூஃப்ளிக்ஸ், எக்ஸ் பிரைம், பேஷராம்ஸ், மூட் எக்ஸ் மற்றும் பிரைம் பிளே போன்ற ஓடிடி தளங்களும் இதில் அடங்கும். இவை தவிர, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மேலும் 19 வலைத்தளங்கள் மற்றும் 10 பயன்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன என்றார். அதுமட்டுமின்றி, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களும் இந்திய பத்திரிகை கவுன்சிலின் பத்திரிகை நடத்தை விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் முருகன் தெளிவுபடுத்தினார்.
தணிக்கை செய்யப்படாத ஓடிடி
ஓடிடி தளங்களின் புரட்சி அதிகரிக்கத் தொடங்கியவுடன், நாட்டில் டிவி சேனல்களை விட்டு மக்கள் படிப்படியாக வெளியேறினர். மேலும் ஓடிடி தளங்களுக்கு சந்தா செலுத்தி, எவ்வித தணிக்கையும் இல்லாத திரைப்படங்கள், வெப் தொடர்கள், ஆவணப்படங்கள் மட்டுமின்றி ஆபாச படங்களையும் பார்க்கும் வசதி உண்டானது. இதனால், சமீப காலங்களில் வெளியாகும் பல படங்கள் பாலியல் மற்றும் வன்முறையை அடிப்படையாக வைத்து தங்கள் கதைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஓடிடி தணிக்கை அவசியம்
இதற்கு நீண்ட காலமாக எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் தற்போது ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முன்னதாக, கலாச்சார சீர்கேடு, போதைப் பொருள் பழக்கம், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களுக்கும் தணிக்கை அளிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்