வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்.. மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்.. அடுத்த விசாரணை எப்போது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்.. மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்.. அடுத்த விசாரணை எப்போது?

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்.. மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்.. அடுத்த விசாரணை எப்போது?

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 11, 2025 05:35 PM IST

மனுஷி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கிறோம்.

வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்.. மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்.. அடுத்த விசாரணை எப்போது?
வெற்றிமாறன் தயாரித்த ‘மனுஷி’ பட விவகாரம்.. மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு தகவல்.. அடுத்த விசாரணை எப்போது?

தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு

அந்த மனுவில் ‘செப்டம்பர் 2024 -ல் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) மனுஷி படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்க மறுத்துவிட்டது. அதற்கான காரணங்களாக மனுஷி திரைப்படம் மாநிலத்தை மோசமாக சித்தரித்து இருப்பதாகவும், படம் இடதுசாரி கம்யூனிசத்தையும், நடப்பு கம்யூனிசத்தையும் குழப்பி இருக்கிறது என்றும் கூறியது.

ஆனால், சென்சார் சான்றிதழ் மறுக்கப்படுவதற்கு முன்பு என்னுடைய தரப்பை சொல்வதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்சார் குழுவில் இருப்பவர்கள் படம் குறித்தான தங்களது தனிப்பட்ட பார்வை தொடர்பான கருத்துக்களை கூறவில்லை.

பேச்சு சுதந்திர வரம்புக்குள் வராத காட்சிகளை எடிட் செய்ய தயாராக இருக்கிறேன். படத்தை மறு ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கக் கோரிய எனது விண்ணப்பத்தின் மீது விரிவான உத்தரவை பிறப்பிக்க திரைப்படத் தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் எவை என குறிப்பிட்டால்தானே அதனை மாற்றியமைக்க முடியும். எனவே, மனுதாரர்களுடன் இணைந்து படத்தைப் பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவை சுட்டிக்காட்டுமாறு உத்தரவிட்டு இருந்தது.

சர்ச்சைக்குரிய காட்சிகள்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில், ‘மனுஷி திரைப்படத்தை இன்று மீண்டும் பார்வையிட்டு மறு ஆய்வு செய்ய இருக்கிறோம். அதில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் குறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கிறோம்.

அதை ஏற்று மனுதாரர், அந்த காட்சிகளை நீக்கினால் என்ன வகையான சான்று வழங்கப்படும் என்ற முடிவை மறு ஆய்வு குழு தெரிவிக்கும். காட்சிகளை நீக்க மறுத்தால், சென்சார் போர்டு முடிவுக்கு அறிக்கை அனுப்பப்படும்.’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மறு ஆய்வு குழு படத்தை பார்த்து, அதன் முடிவுகளை மனுதாரருக்கு தெரிவித்தபின் வழக்கை விசாரணைக்கு உட்படுத்தலாமென்று கூறி விசாரணையை ஜூன் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.