Celebrities Wishes Ajith: அஜித்திற்கு குவியும் வாழ்த்துக்கள்! ரஜினி முதல் மாதவன் வரை! திரையுலகம் முழுவதும் வாழ்த்து!
Celebrities Wishes Ajith: நடிகர் அஜித் துபாயில் நடந்த கார்பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துபாயில் நடைபெற்ற 24 கார்பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது இதனை அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து பல திரைப் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இன்று அதிமுக கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஆன எடப்பாடி பழனிசாமி நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் உட்பட மற்றும் மேலும் பல திரைப் பிரபலங்கள் நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து அவர்களது பதிவை பதிவிட்டுள்ளனர்.
கார்பந்தயம், துப்பாக்கி சுடுதல் மேலும் பல விளையாட்டுகளில் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் அதிகம் உள்ள அஜித்குமார் தற்போது கார் பந்தயத்தில் ஒரு சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார். இது அனைவரின் கவனத்தையும் அவரது பக்கம் திருப்பியுள்ளது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு திரையுள்ள திரையுலகினரும் நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு நடிகர் அஜித்தின் நடிப்பில் 2 படங்கள் வெளியாக தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மீண்டும் நடிக்கப் போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபலங்கள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் அவரது எக்ஸ் தளத்தில், “வாழ்த்துக்கள் என் அன்பான அஜித்குமார். நீங்கள் சாதித்தீர்கள். உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக. உங்களை நேசிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன், “AjithKumarRacing அணியின் முதல் பந்தயத்திலேயே அசாதாரண சாதனை! தனது பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க மற்றும் முக்கியமான தருணம்” எனக் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மாதவன் அஜித்தின் கார் ரேஸை நேரில் பார்வையிட்டார். மேலும் அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மிகவும் பெருமையாக உள்ளது. என்னவொரு மனிதர் அஜித் குமார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தளத்தில், "ஏ.கே சார், உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள். பெருமையான தருணம்'' என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இயக்குநர் சிவா, ‛‛அன்புள்ள அஜித் சார், உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து வெற்றி பெறுங்கள், எப்போதும் எங்களை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் மன உறுதி மற்றும் விடாமுயற்சிக்கு அன்பையும், மரியாதையையும் தெரிவிக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார். இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, வெங்கட் பிரபு மற்றும் சமந்தா உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்களான அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ஆகியோரும் அஜித்திற்கு அவர்களது வாத்துக்களை தெரிவித்துள்ளனர்.

டாபிக்ஸ்