CCL 2025: செலிபிரட்டி கிரிக்கெட்.. ஓட விட்டு அடித்த பெங்கால்.. சுருண்ட விழுந்த சென்னை! - முதல் போட்டியிலே தோல்வி!
CCL 2025: ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ரமணாவும், சரணும் நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை 50 ஆக உயர்த்தினர். இதனையடுத்து சரண் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்ததாக ரமணா அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். - செலிபிரட்டி கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தோல்வி

CCL 2025: திரைநட்சத்திரங்களுக்கு இடையே நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியானது, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்று அழைப்படுகிறது. இந்த லீக்கின் 11 வது சீசன் தொடங்கி இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்கால் டைகர்ஸ் அணியும், சென்னை ரைனோஸ் அணியும் மோதின.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்தப்போட்டியில், டாஸ் வென்ற பெங்கால் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அவர்களது அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஜாமியும், பானியும் ஓப்பனர்களாக களமிறங்கினர். அமித் மற்றும் சென்னை அணியின் சிறப்பான ஃபீல்டிங்கால் பெங்கால் அணி திணறியது. சிறிது நேரத்தில் அந்த அணியில் இருந்து 2 விக்கெட்டுகள் பறிபோனது.
முதல் இன்னிங்ஸில் எவ்வளவு ரன்கள்
6 ஓவர்கள் முடிவில் 3 பேர் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, ராகுலை பறிகொடுத்து நின்றது. துர்திஷ்டவசமாக, ஜாமியும் அடுத்ததாக அவுட் ஆகி வெளியே சென்றார். அதனை தொடர்ந்து வந்த ஜாய் 7 ஆவது ஓவரில் அணியின் முதல் சிக்ஸரை பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து பவுண்டரி அடித்த அவர், அந்த ஓவரின் முடிவில் எக்ஸ்ட்ரா ரன்களோடு சேர்த்து 20 ரன்கள் எடுத்தார். இறுதியாக பெங்கால் அணி முதல் இன்னிங்ஸில் 5- விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி, ஆட்டத்தை நன்றாகவே தொடங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய ரமணாவும், சரணும் நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை 50 ஆக உயர்த்தினர். இதனையடுத்து சரண் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்ததாக ரமணா அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் சென்னை அணி 50 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்தது. இதனையடுத்து, பிரித்வியும், விக்ராந்தும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அவர்கள் அணியின் ஸ்கோரை சீராக கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், அவரகளின் திட்டத்தை பெங்கால் அணி நிறைவேற்ற விட வில்லை. இறுதியாக சென்னை அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை 4 விக்கெட்களை இழந்து 90 ரன்களாக கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் 11 ரன்கள் சென்னை அணி முன்னிலையில் இருந்தது.
சொதப்பலை சரி செய்த பெங்கால்
முதல் இன்னிங்ஸில் நடந்த சொதப்பலை அடுத்த இன்னிங்ஸில் சரிபடுத்த நினைத்த பெங்கால் அணி ஓப்பனர்களாக ஜாய் மற்றும் ராகுலை களமிறக்கியது. இந்த பார்ட்னர்ஷிப் நன்றாக ஆடி 48 ரன்களை சேர்த்தது. சுவாரசியமாக, ஆனந்தா ஓய்வை அறிவித்த பின்னர் பெங்கால் அணி ஜாமியை அனுப்பியது. ஆனால் அவர் ரன் எடுத்த உடன், அவரை பெவிலியனுக்கு திரும்ப கேட்கப்பட்டது. காரணம் செலிபிரட்டி கிரிக்கெட் லீக் விதிகளின் படி, இரண்டாவது இன்னிங்ஸில் ஜாமி முதல் மூன்று இடங்களில் ஆடக்கூடாது.
இதனையடுத்து அவர் சென்றுவிட்டு, மீண்டும் தாமதமாக வந்தார். ரத்ன தீப் ரன் அவுட் முறையில், அவுட் ஆன நிலையில், ஜாமியை அடிக்க விடக்கூடாது என்று முடிவெடுத்த சென்னை அணி, அவருக்கு கடுமையான நெருக்கடியை கொடுத்தது. அதனால் கடைசி ஓவரில் அவரால் 3 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அணியின் கேப்டனான ஜிஸ்ஷூ நன்றாக அணியின் ஸ்கோரை 3 இலக்கமாக மாற்றினார்.
இறுதியாக அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்பு 111 ஆக மாறியது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை ரைனோஸ், 101 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. ஆனால் ஒரு கட்டத்தில் பெங்கால் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய சென்னை அணி 40 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக 30 பந்துகளுக்கு 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று ஆட்டம் மாறிய நிலையில், பெங்கால் அணி கடுமையாக டஃப் கொடுத்து, ஆட்டத்தை தன் பக்கம் திருப்பியது. இதனால் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களில் சுருண்டது. பெங்கால் அணி வெற்றி பெற்றது.

டாபிக்ஸ்