Actor Kamal Haasan: கமலை வைத்து கல்லா கட்டிய மர்ம நபர்கள்.. விவரம் தெரிந்ததும் சுதாரித்த கமல்.. என்ன ஆச்சு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Kamal Haasan: கமலை வைத்து கல்லா கட்டிய மர்ம நபர்கள்.. விவரம் தெரிந்ததும் சுதாரித்த கமல்.. என்ன ஆச்சு?

Actor Kamal Haasan: கமலை வைத்து கல்லா கட்டிய மர்ம நபர்கள்.. விவரம் தெரிந்ததும் சுதாரித்த கமல்.. என்ன ஆச்சு?

Malavica Natarajan HT Tamil
Published Mar 29, 2025 09:48 PM IST

Actor Kamal Haasan: நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரை பயன்படுத்தி மோசடி நடந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

Actor Kamal Haasan: கமலை வைத்து கல்லா கட்டிய மர்ம நபர்கள்.. விவரம் தெரிந்ததும் சுதாரித்த கமல்.. என்ன ஆச்சு?
Actor Kamal Haasan: கமலை வைத்து கல்லா கட்டிய மர்ம நபர்கள்.. விவரம் தெரிந்ததும் சுதாரித்த கமல்.. என்ன ஆச்சு?

மேலும் படிக்க| வித்தியாச கெட்டப்பில் கமல், சிம்பு.. தொடங்கியது தக் லைஃப் பட ரிலீஸ் கவுண்டன்..

எச்சரிக்கை அறிக்கை

இப்படி இருக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் நடிக்க ஆள் எடுத்து ஏமாற்றியதாக தொடர் புகார்கள் வந்துள்ளன. இதை அறிந்த ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கும் விதமாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கை

அந்த அறிக்கையில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க| எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தேவையில்லை.. காஸ்டிங் கவுச் அனுபவத்தை பகிர்ந்த ஆர்த்திகா

காஸ்டிங் ஏஜெண்டுகள் என்றால் என்ன?

சில தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் எடுக்கும் படத்தில் நடிக்க தேவைப்படும் நடிகர்கள், நடிகைகள், துணை நடிகர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல்களை நடத்துவது, அவர்களை ஒப்பந்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும்.

இதற்காக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மொபைல் எண், மெயில் ஐடி போன்றவற்றை சமூகவலைதளங்களில் விளம்பரப்படுத்துவர். இதைப் பார்க்கும் மக்கள் நடிக்க வாய்ப்பு தேடி இந்த நிறுவனத்தை நாடுவர்.

மோசடி நடவடிக்கை

இப்படி சினிமாவில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் நபர்களை குறிவைத்து சிலர் அடிக்கடி மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் சினிமா வாய்ப்பு தேடி அலைபவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்களையும், பணத்தையும் பெறுகின்றனர். பின், அதனை தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக மோசடிக்காரர்கள் பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனக்களின் பெயர்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படித் தான் சிலர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க| 100 நாட்களை கடந்த அமரன் படம்.. கொண்டாட்டத்தை பகிர்ந்து கொண்ட படக்குழு..

ஹிட் அடித்த அமரன்

இந்த நிறுவனம் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் படத்தினை தயாரித்தது. இந்தப் படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மாபெரும் ஹிட் கொடுத்த படமாக மாறியது. இது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி மக்களையும் கவர்ந்து ஹிட் அடித்தது. இந்தப் படம் திரையரங்குகளிலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக ஓடி ரூ. 300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது.

இந்தப் படங்களைத் தவிர ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ராஜ பார்வை, விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம், தூங்காவனம், விக்ரம், தக் லைஃப் படங்களை தயாரித்துள்ளது,