Actress Rohini: ‘அந்த நடிகை அப்படி..இந்த நடிகை இப்படி.. பேட்டிகள் பலவிதம்..’ - மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!-case has been registered on a complaint has been filed against dr kantharaj by rohini for making offensive statements - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Rohini: ‘அந்த நடிகை அப்படி..இந்த நடிகை இப்படி.. பேட்டிகள் பலவிதம்..’ - மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!

Actress Rohini: ‘அந்த நடிகை அப்படி..இந்த நடிகை இப்படி.. பேட்டிகள் பலவிதம்..’ - மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 16, 2024 08:33 AM IST

Actress Rohini: நடிகைகள் குறித்து ஆபாச கருத்துக்களை யூடியூப் சேனல்களில் பேசி வந்த மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Actress Rohini: ‘அந்த நடிகை அப்படி..இந்த நடிகை இப்படி.. பேட்டிகள் பலவிதம்..’ - மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!
Actress Rohini: ‘அந்த நடிகை அப்படி..இந்த நடிகை இப்படி.. பேட்டிகள் பலவிதம்..’ - மருத்துவர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!
டாக்டர் காந்தராஜ்
டாக்டர் காந்தராஜ்

முன்னதாக, கடந்த மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள சினிமாவில் நடிகைகள், பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்கள், தொல்லைகள் குறித்தும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியான பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகர்கள் பற்றி நடிகைகள் சிலர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மலையாள சினிமா போல் தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் பாலியல் சீணடல்களும், பாலியல் தொல்லைகளும் இருப்பதாக ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட சில மூத்த நடிகைகள் பேசினர். இதற்கிடையே தமிழ் சினிமாவில் நிகழும் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் குறித்தும், வாய்ப்புக்கான வலையில் சிக்கும் நடிகைகளும் குறித்து பல்வேறு யூடியூப் சேனல்களில் சினிமா பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் என பலரும் பேசி வருகிறார்கள்.

மருத்துவர் காந்தராஜ் பேட்டி

அந்த வரிசையில் பிரபல விமர்சகரும் அரசியல், சினிமா குறித்து பல்வேறு விஷயங்களை பேசுபவருமான டாக்டர். காந்தராஜ் யூடியூப் சேனல்களில் அளிக்கும் பேட்டியில் பல்வேறு நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது குறித்து பேசி இருந்தார். காஸ்டிங் கவுச் எனப்படும் வாய்ப்புக்கான வலையில் நடிகைகள் சிக்குவது பற்றியும் அவர் வெளிப்படையாக சில நடிகைகளின் மறைமுகமாக சாடினார்.

நடிகைகள் படத்தில் நடிப்பதற்கு முன்னரே இதுபற்றி அனைத்து தெரிந்தும் ஓகே சொல்லிவிட்டு, பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜஸ்மெண்ட் என சினிமாவில் தொடர்ச்சியாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

வெறும் நடிகர்களை மட்டுமல்லாமல் இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களையும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் நடிகைகள் இருக்கிறார்கள் எனவும் அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

நடிகை ரோகிணி போலீசில் புகார்

இதையடுத்து தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரோகிணி, டாக்டர். காந்தராஜ் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

நடிகை ரோகிணி
நடிகை ரோகிணி

கேரளாவில் ஹேமா கமிட்டி போல், தமிழ்நாட்டில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியின் தலைவராக நடிகை ரோகிணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி யூடியூப்பில் வெளியான டாக்டர். காந்தராஜ் பேட்டியில், நடிகைகள் குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியதற்காக அவர் மீது புகார் அளித்தார்.

கிரிமினல் நடவடிக்கை

குறிப்பிட்ட வீடியோவில் "நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக பேசியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பை கொச்சப்படுத்தியுள்ளார்.

அவரது பேச்சு நடிகைகளை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களை தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது. அவரது இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, டாக்டர். காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்மந்தப்பட்ட விடியோ யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என ரோகிணி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.