Rishab Shetty: இவரு ஹனுமானா? கடவுள அவமானப்படுத்தாதிங்க.. ரிஷப் ஷெட்டி மீது வழக்கு - புஷ்பா 2 பிரச்னைக்கு பின் அடுத்து
Rishab Shetty: புஷ்பா 2 கூட்ட நெரிசல் வழக்கில் இருந்து தற்காலிக நிவாரணம் பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது அடுத்த பிரச்னையில் சிக்கியுள்ளனர். ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான் படத்தில் கடவுளின் சித்தரிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காந்தாரா படம் மூலம் பான் இந்தியா அளவில் புகழ் பெற்றார் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி. இதையடுத்து இவர் ஜெய் ஹனுமான் என்ற தெலுங்கு படத்தில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் வர்மா இயக்கும் இந்த படத்தில் கடவுள் ஹனுமானின் உருவத்தை மனித உருவம் போல் காட்டி இழிவு படுத்தி இருப்பதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாமிடல் திருமால் ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடவுளை அவமானப்படுத்தியுள்ளனர்
ஜெய் ஹனுமான் படத்தின் டீஸரை கடந்த அக்டோபரில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டனர். இதில் தேசிய விருது வென்ற நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டரில் ரிஷப் ஒரு வலிமைமிக்க ராஜா போல் உடலின் தசைகள் இறுக்கமாக புடைக்க காட்சியளிக்கிறார். அவரது முகம் மனித முகமாக இருக்கிறது. அதாவது, ஹனுமானை மனித முகமாக காண்பித்து, கடவுளை அவமானப்படுத்தும் வகையில் சித்தரித்துள்ளனர்.
ரிஷப் ஷெட்டி தேசிய விருது பெற்ற நடிகர் என்பதால், ஹனுமானாக நடித்தாலும் அவரது முகம் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக நான் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.