Caption Miller: என்னங்க சொல்றீங்க..கிளைமாக்ஸ் படப்பிடிப்புக்கு மட்டும் இத்தனை நாளா?
கேப்டன் மில்லர் பட கிளைமாக்ஸ் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் பீரியட் ஆக்ஷன் டிராமா பாணியில் உருவாகியிருக்கும் படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.
படத்தின் நீளம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் இடம்பிடித்திருக்கும் சில வன்முறை காட்சிகளுக்கு கத்திர போட்டுள்ளனர்.
மொத்தமாக 4 நிமிட காட்சிகள் வரை நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி 37 மணி நிமிடங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் வெள்ளையர்களுக்கு எதிராக கிராம மக்கள் காக்கும் ஹீரோவாக படத்தில் தனுஷ் தோன்றினார்.
படத்தில் கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ், நாசர் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்தார்.
கேப்டன் மில்லர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் படக்குழு 32 நாட்கள் படமாக்கி உள்ளார்கள். அருண் மாதேஸ்வரனின் தனது ராக்கி படம் முழுவதுமே 37 நாட்களில், முழுவதுமாக படமாக்கப்பட்டது.
தனுஷ் கடைசியாக தமிழ், தெலுங்கு என இருமொழி படமான வாத்தியில் நடித்திருந்தார். கேப்டன் மில்லரைத் தவிர, சேகர் கமுலா இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் தற்காலிகமாக பெயரிடப்பட்ட டி 51, பாலிவுட் படமான தேரே இஷ்க் மே, ராஞ்சனா மற்றும் அத்ரங்கி ரே ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆனந்த் எல் ராயுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார்.
நடிகர் தனுஷ் ஏற்கனவே, இயக்குநர் வெற்றி மாறனுடன் இணைந்து சில படங்களில் பணியாற்றியிருக்கிறார். அந்த வரிசையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் சேர்ந்துள்ளார்.
தனுஷின் முந்தைய படமான வாத்தி, நல்ல வரவேற்பைப் பெற்றது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்