தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Captain: When Vijayakanth Said About People's Love For Mgr What Happened To Him! Exciting Event

Captain: எம்ஜிஆர் மீது மக்கள் வைத்த பாசம் குறித்து விஜயகாந்த் கூறியதும்!அவருக்கு நடந்ததும்! நெகிழ்ச்சியான நிகழ்வு!

Priyadarshini R HT Tamil
Jan 08, 2024 02:59 PM IST

Captain: எம்ஜிஆர் மீது மக்கள் வைத்த பாசம் குறித்து விஜயகாந்த் கூறியதும்!அவருக்கு நடந்ததும்! நெகிழ்ச்சியான நிகழ்வு!

Captain: எம்ஜிஆர் மீது மக்கள் வைத்த பாசம் குறித்து விஜயகாந்த் கூறியதும்!அவருக்கு நடந்ததும்! நெகிழ்ச்சியான நிகழ்வு!
Captain: எம்ஜிஆர் மீது மக்கள் வைத்த பாசம் குறித்து விஜயகாந்த் கூறியதும்!அவருக்கு நடந்ததும்! நெகிழ்ச்சியான நிகழ்வு!

ட்ரெண்டிங் செய்திகள்

விஜயகாந்த், உடல்நிலை காரணமாக சில ஆண்டுகளாகவே சினிமாவில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகியிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு தமிழக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

இந்நிலையில் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லம், கோயம்பேட்டில் இருந்த கட்சி அலுவலகம், தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, அவரது ரசிகர்கள், கட்சித்தொண்டர்கள், பொதுமக்கள் என மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது நினைவிடத்தில் பொதுமக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் அவர் குறித்த சிறப்பு நீயா நானா நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர் குறித்த நினைவுகளை பல்வேறு பிரபலங்களும் பகிர்ந்துகொண்டார்கள். அப்போது பேசிய ஒருவர் நடிகர் சங்கக்கடனை தீர்க்க நடிகர்கள் அனைவரும் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளை நடத்தியது குறித்த நிகழ்வுகளை பகிர்ந்தகொண்டார்.

 

அப்போது நிகழ்ச்சி ஏற்பாடு செய்த தயாரிப்பு நிறுவனம் பணத்தை ஏமாற்ற பார்த்தது. எவ்வளவு பேசியும் அவர்கள் ஏற்கவில்லை. ஆனால் விஜயகாந்த் வந்து அந்த நபரை அப்படியே தூக்கி சுவரோடு சேர்த்து நிப்பாட்டி, மிரட்டி உண்மையை ஒத்துக்கொள்ள வைத்தார்.

அப்போது அங்கு சிசிடிவி இருக்கிறது. போலீசார் வருவார்கள் என்று விஜயகாந்திடம் கூறியபோது. தவறு செய்த நீயே பயமில்லாதபோது, அதை கண்டுபிடித்த நான் ஏன் அஞ்சவேண்டும் என்று அஞ்சாமல் பேசி அவர்கள் செய்த தவறை ஏற்றுக்கொள்ள வைத்தார். எதற்காகவும் துணிச்சலை விடாதவர்.

எல்லோரும் விலகியபோதும், துணிச்சலாக எதிர்த்து நின்ற மனிதர் என்றும், அவர் பிறந்த நாளன்று கூட தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் 12 மணி நேரம் ஃபோட்டக்கள் எடுத்துக்கொண்டு, சாப்பிடாமல், பிறந்த நாளன்று வேறு எந்த கொண்டாட்டமும் வைத்துக்கொள்ளாமல் ரசிகர்களுடன் நின்றவர் என்று அந்நிகழ்ச்சியில் பேசிய மற்ற பிரபலங்களும் அவரை புகழ்ந்தனர். எம்ஜிஆர் இறந்தபோது, வந்த மக்கள் கூட்டத்தைப்பார்த்து ‘செத்தா இப்டி சாகணும்’ என்ற சொன்னார்.

அதேபோன்ற ஒரு மரணம் அவருக்கு கிடைத்துவிட்டது. அவருக்கும் இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயகாந்த் என்ற நடிகர், அரசியல்வாதி இறந்தாலும், விஜயகாந்த் என்ற மனிதர் மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம். சான்றுகள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.