Captain Vijayakanth: என் தங்கச்சி கூட காதல் காட்சியா.. நடிகைக்கு நோ சொன்ன கேப்டன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Captain Vijayakanth: என் தங்கச்சி கூட காதல் காட்சியா.. நடிகைக்கு நோ சொன்ன கேப்டன்!

Captain Vijayakanth: என் தங்கச்சி கூட காதல் காட்சியா.. நடிகைக்கு நோ சொன்ன கேப்டன்!

Aarthi Balaji HT Tamil
Mar 06, 2024 06:00 AM IST

நடிகை ஊர்வசி , விஜயகாந்த் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

நல்ல நடிகராக மட்டுமில்லாமல், நல்ல அரசியல்வாதியாகவும், நல்ல மனிதர் என்பதையும் நிரூபித்தார். அவரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு மட்டுமின்றி இந்திய சினிமாவுக்கே பெரும் இழப்பு என்றே சொல்லலாம். விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். திரையுலகினர் சார்பில் இரங்கல் குவிந்தது. இப்போதும் பல பிரபலங்கள் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை பல பேட்டிகள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். நடிகை ஊர்வசி  விஜயகாந்த் தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஊர்வசி தற்போது ரஞ்சித் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் 'ஜெய் பேபி' படத்தில் நடித்து வருகிறார். படத்தில் டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் மார்ச் 8ஆம் தேதி வெளியாகிறது. அவர் தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். 

இதன் ஒரு பகுதியாக ஊர்வசி பேட்டி ஒன்றில் பேசும் போது கேப்டன் விஜயகாந்த் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். விஜயகாந்த் எப்போதும் தங்கச்சி என்றே அழைப்பார். அதனால் என்னுடன் காதல் காட்சிகளில் நடிக்க முடியாது என்றார். சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தோம். ஆனால் அய்யோ இந்தப் பெண்ணால் நடிக்கவே முடியாது. நான் அவளை தங்கச்சியாக பார்கிறேன் என சொல்லுவர். 

இதனால் அவருடன் ஓரிரு படங்கள் மட்டுமே நடித்து இருக்கிறேன். அவர் மிகவும் கஷ்டப்படுபவர். எப்படி இப்படி வெள்ளையாக இருக்கிறீர்கள் என்று கேட்டு கிண்டல் செய்வார்.

சமைப்பதிலும் வல்லவர். விஜயகாந்தின் கடைசிப் படமான ‘தென்னவன்’ படத்தில் நடித்தேன். அந்த இடத்தில் உணவு பல வடிவங்களில் வருகிறது. நம் கிராமங்களில் உள்ளதைப் போல உணவும் உண்டு.  விஜயகாந்த் எங்கு சென்றாலும் தலைவர் என்றும், அனைவரையும் காக்கும் நபர் என்றும் ஊர்வசி கூறுகிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.