Captain Miller Box Office: ரூ. 100 கோடியை நெருங்கும் வசூல்! வரும் வாரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு - ஏன் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Captain Miller Box Office: ரூ. 100 கோடியை நெருங்கும் வசூல்! வரும் வாரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு - ஏன் தெரியுமா?

Captain Miller Box Office: ரூ. 100 கோடியை நெருங்கும் வசூல்! வரும் வாரம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு - ஏன் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 21, 2024 02:37 PM IST

வரும் வாரம் கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாக இருப்பதால், இதன் வசூல் எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dhanush in a still from Captain Miller
Dhanush in a still from Captain Miller

பேன் இந்தியா படமாக உருவாகியிருந்தாலும், கேப்டன் மில்லர் தெலுங்கில் வெளியாகவில்லை. சங்கராந்தியை முன்னிட்டு ஹனுமன், குண்டூர் காரம், சைந்தவ், நா சாமி ராக என தெலுங்கில் நான்கு படங்கள் வெளியான காரணத்தால் பிற மொழி படங்களை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு நிலவிய நிலையில் கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே தமிழ் உள்பட ரிலீசான பிற மொழிகளில் கேப்டன் மில்லர் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. பொங்கலுக்கு ரிலீஸான படங்களில் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் ரூ. 100 கோடியை நெருங்கியுள்ளது.

 

படம் வெளியாகி 8 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை படம் உலகம் முழுவதும் ரூ. 90.39 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. விரைவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்கும் நிலையில் முதல் நாள் ரூ. 16.29 கோடி, இரண்டாவது நாள் ரூ. 14.18 கோடி, மூன்றாவது நாள் ரூ. 15.65 கோடி, நான்காவது நாள் ரூ. 13.51 கோடி, ஐந்தாவது நாள் ரூ. 12.24 கோடி, ஆறாவது நாள் ரூ. 9.33 கோடி, ஏழாவது நாள் ரூ. 4.92 கோடி, எட்டாவது நாள் ரூ. 4.27 கோடி என வசூலித்துள்ளது.

கேப்டன் மில்லர் தெலுங்கு பதிப்பு ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஆசியன் சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன் இணைந்து படத்தை தெலுங்கில் வெளியிடுகிறது. இதனால் படத்தின் வசூல் வரும் வாரத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு தமிழை விட குறைவான நீளம் கொண்டதாக உள்ளது. படத்தின் தமிழ் பதிப்பு 2 மணி நேரம் 37 நிமிடங்கள் இருந்து வரும் நிலையில், தெலுங்கு பதிப்பு 2 மணி நேரம் 29 நிமடங்கள் உள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1930கலில் நடக்கும் கதையாக கேப்டன் மில்லர் படம் உருவாகியுள்ளது. தனது மக்களுக்கு எதிராக நிகழும் கொடூரமான குற்றங்களில் இருந்து காப்பாற்ற புரட்சிகாரனமாக ஹீரோ மாறுவதே படத்தின் ஒன்லைன்.

படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளை பெற்றது. படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தில் பின்னணி இசையும் பேசப்படும் விதமாக அமைந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.