தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Captain Miller Trailer: Dhanush Priyanka Mohan Arun Matheswaran Captain Miller Trailer Is Out

Captain Miller Trailer: ஒரு பக்கம் மனைவி.. மறுபக்கம் நண்பன்.. நின்று ஆடும் தனுஷ்.. மிரட்டும் கேப்டன் மில்லர் ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 05:38 PM IST

முழுக்க, முழுக்க தனுஷை மையப்படுத்தியே வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லரில் தனுஷின் ஸ்கிரீன் பிரசன்ஸூம், அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பும் வழக்கம் போல அதகளம்.

கேப்டன் மில்லர் ட்ரெய்லர்!
கேப்டன் மில்லர் ட்ரெய்லர்!

ட்ரெண்டிங் செய்திகள்

அண்மையில் வெளியான ’கேப்டன் மில்லர்’ படத்தின் டீஸர், கேஜிஎஃப் படம் போல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தென்னிந்தியா முழுக்க ஏற்படுத்தியது. 

அதனை தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 

பீரியாடிக் ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்தப்படத்தின் இயக்குநரை பற்றி தனுஷ் பேசும் போது, ‘இது சம்பவம் பண்ற கை’ என்று புகழ்ந்து இருந்தார். அதனை உண்மை என்று ஒத்துக்கொள்ளும் வகையிலேயே, ட்ரெய்லர் அமைந்து இருக்கிறது. 

பீரியாடிக் படங்களை பொறுத்த வரை அதில் இருக்கும் மிகப்பெரிய சவால், அந்த கதைக்களத்தை பார்வையாளர்களை உண்மை என நம்ப வைப்பது. அதனை படம் பூர்த்தி செய்யும் என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே, இந்த முன்னோட்டம் அமைந்திருக்கிறது.

முழுக்க, முழுக்க தனுஷை மையப்படுத்தியே வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லரில் தனுஷின் ஸ்கிரீன் பிரசன்ஸூம், அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பும் வழக்கம் போல அதகளம். 

சிவராஜ் குமார் தொடர்பான காட்சிகள் எதுவும் பெரிதாக ட்ரெய்லரில் இல்லை. அதிதி பாலன், பிரியங்காவின் நேருக்கு நேர் சீன் நச் ரகம்.. ஆக்‌ஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் மிரட்டல் என்று சொல்வதை விட மிரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஜீவியின் பின்னணி இசை  ட்ரெய்லரை தூக்கி நிறுத்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் எடிட்டர் காட்சிகளை கட் செய்திருக்கும் விதம் புருவம் உயர்த்த வைக்கிறது. ட்ரெய்லர் கொடுத்த பூரிப்பை, படமும் கொடுக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம். ஜனவரி 12 அன்று வெளியாக இருக்கும் இந்தப்படத்தோடு, நடிகர் சிவகார்த்திகேயனின் அயலானும், நடிகர் ரஜினிகாந்தின் லால் சலாமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது!

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.