Captain Miller: நான்கு நிமிட காட்சிகள் கட்..! ரிலீஸ் செய்ய தடை - தனுஷின் கேப்டன் மில்லர் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Captain Miller: நான்கு நிமிட காட்சிகள் கட்..! ரிலீஸ் செய்ய தடை - தனுஷின் கேப்டன் மில்லர் லேட்டஸ்ட் அப்டேட்

Captain Miller: நான்கு நிமிட காட்சிகள் கட்..! ரிலீஸ் செய்ய தடை - தனுஷின் கேப்டன் மில்லர் லேட்டஸ்ட் அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 09, 2024 09:20 PM IST

தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு தணிக்கு குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தை சட்டவிரோதமாக வெளியீட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கேப்டன் மில்லர் பட போஸ்டரில் தனுஷ்
கேப்டன் மில்லர் பட போஸ்டரில் தனுஷ்

இதற்கிடையே படத்தின் நீளம் மற்றும் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் இடம்பிடித்திருக்கும் சில வன்முறை காட்சிகளுக்கு கத்திர போட்டுள்ளனர்.

மொத்தமாக 4 நிமிட காட்சிகள் வரை நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி 37 மணி நிமிடங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், படத்தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ், சட்டவிரேதமாக படத்தை இணையத்தளத்தில் வெளியிடுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று கேப்டன் மில்லர் படத்தை 1166 இணையத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.

இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மற்றும் தனியார் இணையத்தள சேவை வழங்கும் நிறுவனங்கல் மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்தார்.

பெரிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன், கன்னட நடிகர் ஷிவ்ராஜ்குமார், சந்தீப் கிஷான், ஜான் கொக்கேன் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை ஜி.வி. பிரகாஷ் குமார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அத்துடன் இந்தப் படம் ஐமேக்ஸ் பதிப்பிலும் வெளியாகவுள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.