1 கிராம் கொக்கைன் 12 ஆயிரம்? அதிமுக பிரமுகர் வழியில் சிறப்பாக நடந்த சப்ளை! - நடிகர் ஸ்ரீகாந்த் கைது! - பின்னணி இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  1 கிராம் கொக்கைன் 12 ஆயிரம்? அதிமுக பிரமுகர் வழியில் சிறப்பாக நடந்த சப்ளை! - நடிகர் ஸ்ரீகாந்த் கைது! - பின்னணி இங்கே!

1 கிராம் கொக்கைன் 12 ஆயிரம்? அதிமுக பிரமுகர் வழியில் சிறப்பாக நடந்த சப்ளை! - நடிகர் ஸ்ரீகாந்த் கைது! - பின்னணி இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 23, 2025 05:20 PM IST

போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

1 கிராம் கொக்கைன் 12 ஆயிரம்? அதிமுக பிரமுகர் வழியில் சிறப்பாக நடந்த சப்ளை! - நடிகர் ஸ்ரீகாந்த் கைது! - பின்னணி இங்கே!
1 கிராம் கொக்கைன் 12 ஆயிரம்? அதிமுக பிரமுகர் வழியில் சிறப்பாக நடந்த சப்ளை! - நடிகர் ஸ்ரீகாந்த் கைது! - பின்னணி இங்கே!

யார் மூலம் சப்ளை

அ.தி.மு.க பிரமுகர் பிரசாத் என்பவரிடம் போலீஸார் போதைப்பொருள் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிரதீப் என்பவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்

இந்த விசாரணையில் அவர் பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினிமா பார்ட்டிகளுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்தது அம்பலமானது.

மற்றொரு நடிகர்

குறிப்பாக பிரதீப் தனது வாக்குமூலத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும், மற்றொரு நடிகரும் ( நடிகர் கிருஷ்ணா என்று சொல்லப்படுகிறது) தன்னிடம் பிரசாத் மூலம் கொக்கைன் போதைப்பொருளைப் பெற்று பயன்படுத்தியதை நேரடியாகவே பார்த்திருப்பதாகவும், ஸ்ரீ காந்திற்கு 1 கிராம் கொக்கைன் போதைப்பொருளை 12 ஆயிரத்திற்கு விற்றதாகவும், ஜிபே மூலம் அவரிடம் இருந்து 4 . 2 லட்சம் ரூபாய் பெற்றதாகவும், 40 முறை பிரசாத்துக்கு போதைப்பொருள் விநியோகம் செய்திருப்பதாகவும் கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

உறுதி செய்த போலீஸ்

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் அவரின் இரத்தமாதிரிகளை சேகரித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவுகளில் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு நடிகரிடம் விசாரணை நடந்து வருகிறது.