தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bramayugam Ott Release Here When And Where You Can Stream Mammootty New Movie

Bramayugam OTT release: மம்முட்டியின் பிரம்மயுகம்…ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு! - எந்த ஓடிடி தளம் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 06, 2024 03:33 PM IST

பிரம்மயுகம் ஓடிடி வெளியீடு: ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள திரைப்படமான பிரம்மயுகம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Mammootty in a still from Bramayugam
Mammootty in a still from Bramayugam

ட்ரெண்டிங் செய்திகள்

பிரம்மயுகம் எப்போது, எங்கு பார்க்க வேண்டும்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு சோனி லைவ், “மர்மம் மற்றும் திகிலுடன், கருப்பு வெள்ளை படைப்பாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி வெளியான பிரம்மயுகம் திரைப்படம், வருகிற மார்ச் 15 முதல் SonyLIV - ல் ஸ்ட்ரீமிங் ஆக இருக்கிறது” என்று குறிப்பிட்டு இருக்கிறது. 

 

நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்.என்.ஓ.டி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப்படத்தில் மம்முட்டியுடன், அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் மணிகண்டன் ஆர்.ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் மம்மூட்டியின் நடிப்பு மற்றும் அதன் தொழில்நுட்ப அம்சங்களுக்காக பாராட்டப்பட்டது.

முன்னதாக, இந்தப்படத்தின் இயக்குநர் இயக்குநர் ராகுல் சதாவிசன் இந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “ மம்முக்கா இப்போ 420 படங்கள்ல நடிச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். அவருடன் ஒரு படம் செய்ய வேண்டும் என்பது எப்போதும் எனக்கு ஒரு கனவாக இருந்தது, அவருடன் ஒரு வித்தியாசமான படத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். 

ஒரே ஒரு போஸ்டர் (அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது) மூலம் பார்வையாளர்களை எப்படி உற்சாகப்படுத்துவது?.. மம்முட்டி சார் மிகவும் கவர்ச்சியானவர், இளமையாக இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். 

அந்த தோற்றத்தையும், கருத்தையும் உடைத்து மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே நான் எப்படி அவரை ஒரு வயதானவர் போல் தோற்றமளிக்க முடியும்? என்று யோசித்தேன். 

பிரம்மயுகத்தில் கொடுமான் பொட்டி ஒரு குறிப்பிட்ட விதத்தில் தோற்றமளிக்கிறார், நடந்து கொள்கிறார். மம்முட்டி சாரால் மட்டுமே இந்த கேரக்டரில் நடிக்க முடியும். நான் இந்த கதாபாத்திரத்தை அவருக்காக எழுதினேன், ஒருபோதும் இரண்டாவது ஆப்ஷன் எனக்கு இல்லை, "என்று கூறினார்.

 

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்