Tamil News  /  Entertainment  /  Brahmastra Beats Kgf 2 Collection
பிரம்மாஸ்திரா
பிரம்மாஸ்திரா

Brahmastra Breaks Kgf 2 Record: கேஜிஎஃப் 2 சாதனையை முறியடித்த பிரம்மாஸ்திரா

23 September 2022, 12:59 ISTAarthi V
  • Share on Twitter
  • Share on FaceBook
23 September 2022, 12:59 IST

பிரம்மாஸ்திரா திரைப்படம், கேஜிஎஃப் 2 வசூல் சாதனையை முறியடித்தது.

பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான படம், பிரம்மாஸ்திரா. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மிகப்பெரிய பட்ஜெட்டில் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியான இந்தப் படம் வசூலில் சற்று பின் திங்கி இருந்தது. 

ட்ரெண்டிங் செய்திகள்

படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை எட்டிய பிறகும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. , தேசிய சினிமா தினமான வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) பிரம்மாஸ்திரா திரைப்படம் கேஜிஎஃப் 2 பட சாதனையை ஒரே நேரத்தில் முறியடித்தது .

தேசிய சினிமா தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களில் ரூ.75க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பிரம்மாஸ்திரத்துக்கு முன்பதிவு குவிந்தது. வெள்ளிக்கிழமை முன்பதிவு முறையில் 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின. இவை பத்து லட்சத்தைத் தாண்டிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன.

தேசிய சினிமா தினத்தில் பிரம்மாஸ்திராவின் முன்பதிவு மொத்தம் 9 லட்சம் வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 முன்பதிவு 5.15 லட்சம் ருபாய் ஆகும். அதே போல் பாகுபலி 2 படம் 6.5 லட்சம் ரூபாய் வசூல் செய்ததது. ரூ.410 கோடி பட்ஜெட்டில் உருவான பிரம்மாஸ்திரா திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.360 கோடி வசூல் செய்துள்ளது.

 அயன் முகர்ஜி இயக்கிய இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, அமிதாப் பச்சன், மௌனி ராய் ஆகியோர் நடித்துள்ளனர். ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர் கெஸ்ட் ரோலில் தோன்றினர். 

  • Share on Twitter
  • Share on FaceBook

டாபிக்ஸ்