Box office Collection: சாதித்த ராம் சரண்.. சறுக்கிய வணங்கான் - பொங்கல் ரேஸில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Collection: சாதித்த ராம் சரண்.. சறுக்கிய வணங்கான் - பொங்கல் ரேஸில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

Box office Collection: சாதித்த ராம் சரண்.. சறுக்கிய வணங்கான் - பொங்கல் ரேஸில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 11, 2025 10:03 AM IST

Pongal Movie Box office Collection: தாமதமாக ரிலீஸ் ஆன காரணத்தால் நேர்மறை விமர்சனங்களை பெற்ற போதிலும் பாலாவின் வணங்கான் படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ. 1 கோடி கூட வசூலை ஈட்டவில்லை.

சாதித்த ராம் சரண்.. சறுக்கிய வணங்கான் - பொங்கல் ரேஸில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
சாதித்த ராம் சரண்.. சறுக்கிய வணங்கான் - பொங்கல் ரேஸில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

ஷங்கரின் முதல் தெலுங்கு படமாக வெளியாகியிருக்கும் கேம் சேஞ்சர் இந்தியாவில் மட்டும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.51.25 கோடி நிகர வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை தெரிவிக்கும் Sacnilk.com தெரிவித்துள்ளது.

தெலுங்கில் இந்த படம் ரூ. 42 கோடியும், தமிழில் ரூ.2.1 கோடியும் வசூலித்தது. இந்தி மொழியைப் பொறுத்தவரை, படம் ரூ.7 கோடி வசூலித்தது. கன்னடத்தில், படம் ரூ.0.1 கோடியும், மலையாளத்தில் ரூ.0.05 கோடியும் வசூலித்தது என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கு பதிப்பின் காலை காட்சிகளில் படம் 55.82% ஆக்கிரமிப்பையும், பிற்பகல் காட்சிகளில் 39.33% ஆக்கிரமிப்பையும் கொண்டிருந்தது. மாலை காட்சிகள் 50.53% ஆக உள்ளன. இந்தியின் 4DX பதிப்பின் பிற்பகல் காட்சிகளில் 82% ஆக்கிரமிப்பு இருந்தது.

கடைசியாக ராம் சரண் சோலோ ஹீரோவாக நடித்த படமான வினய விதேய ராமா படம் 2019இல் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ரூ. 34 கோடி வசூலித்தது. இதன் பிறகு ஜூனியர் என்டிஆருடன் அவர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் படம் 2022இல் வெளியானது. ஆர்ஆர்ஆர் படம் முதல் நாளில் ரூ. 133 கோடி வசூலித்தது.

கேம் சேஞ்சர் படம் ராம் சரணின் முந்தைய சோலோ ஹீரோ படமான வினய விதேய ராமா படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து சாதனை புரிந்துள்ளது. இந்தியன் 2 தோல்வியிலிருந்து மீளும் படமாக இயக்குநர் ஷங்கருக்கு கேம் சேஞ்சர் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

வணங்கான் வசூல் நிலவரம்

பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்பட பலர் நடித்து த்ரில்லர் படமாக வணங்கான் வெளியாகியுள்ளது. சில பிரச்னைகள் காரணமாக படம் திட்டமிட்டபடி முதல் காட்சி வெளியாகவில்லை. தாமதமாக படம் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வணங்கான் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்களும் வெளியாகின்றன. ரிலீஸ் தாமதம் காரணமாக படம் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், படம் ரூ. 0.85 கோடி வசூலித்திருப்பதாக Sacnilk.com தெரிவித்துள்ளது. படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இரண்டாம் நாள் முதல் வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வணங்கான் படம் பாலாவுக்கு சிறந்த கம்பேக்காக உள்ளதாகவும், அருண் விஜய் நடிப்பு அற்புதமாக இருப்பதாவும் பேசப்படுகிறது.

இதேபோல் ஷேன் நிகம், நிஹரிகா கோணிடலா, ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்து பேமிலி ட்ராமா ஆக்சன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மெட்ராஸ்காரன் படமும் கணிசமான வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறு பட்ஜெட் படமான மெட்ராஸ்காரன் படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.