Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல்!
Thangalaan 3 Day Box Office: பாக்ஸ் ஆபிஸில் கொடியேற்றிய தங்கலான் - மூன்று நாட்களில் வாயைப்பிளக்க வைக்கும் வசூல் குறித்துப் பார்ப்போம்.

Thangalaan 3 Day Box Office: தங்கலான் திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த நிலவரங்கள் வரத்தொடங்கியுள்ளன.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
தங்கலான் சொல்லும் கதை என்ன?
வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனைப்பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாகப் பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியைக் கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான், தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் வந்த அந்தணன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர்.
