Box Office: ரேஸில் ராஜா போல் முன்னேறும் மதகஜராஜா.. போட்டியில் வணங்கான், காதலிக்க நேரமில்லை.. பரிதாபத்தில் கேம் சேஞ்சர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office: ரேஸில் ராஜா போல் முன்னேறும் மதகஜராஜா.. போட்டியில் வணங்கான், காதலிக்க நேரமில்லை.. பரிதாபத்தில் கேம் சேஞ்சர்

Box Office: ரேஸில் ராஜா போல் முன்னேறும் மதகஜராஜா.. போட்டியில் வணங்கான், காதலிக்க நேரமில்லை.. பரிதாபத்தில் கேம் சேஞ்சர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 17, 2025 10:00 AM IST

Box Office Collection Today: பொங்கல் ரிலீஸ் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மதகஜராஜா முன்னேறி செல்லும் நிலையில், பாலாவின் வணங்கான் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கிய காதலிக்க நேரமில்லை படங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஷங்கரின் கேம் சேஞ்சர் பரிதாப நிலையில் உள்ளது.

ரேஸில் ராஜா போல் முன்னேறும் மதகஜராஜா.. போட்டியில் வணங்கான், காதலிக்க நேரமில்லை.. பரிதாபத்தில் கேம் சேஞ்சர்
ரேஸில் ராஜா போல் முன்னேறும் மதகஜராஜா.. போட்டியில் வணங்கான், காதலிக்க நேரமில்லை.. பரிதாபத்தில் கேம் சேஞ்சர்

அத்துடன் ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டு நாள்கள் மட்டும் திரையரங்குகளில் ஓடி, பின்னர் ரிலீசில் இருந்து பின் வாங்கப்பட்டது தருணம் என்ற படம்.

பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படங்களில் கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் ஒரு வாரத்தை கடந்துள்ளன. அத்துடன் பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளிவந்த மற்ற படங்களும் மூன்று நாள்களை கடந்துவிட்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்

முன்னேறி செல்லும் மதகஜராஜா

விஷால் - சுந்தர் சி கூட்டணியில் காமெடி கலந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினராக உருவாகியிருக்கும் மதகஜராஜா படம் இந்த ஆண்டுக்கான பொங்கல் ரேஸில் தொடர்ந்து முன்னேறி செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான படம் இதுவரையிலான 5 நாள்களில் ரூ. 25.14 கோடி வரை வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் தகவல்களை வெளிப்படுத்தும் sacnilk.com தெரிவித்துள்ளது.

படத்தில் அஞ்சலி, வரலட்சுமி கவர்ச்சி தரிசனம், சந்தானம், மனோபாலா காமெடி, பாடல்கள் மற்றும் சண்டை காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பிற படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் தமிழில் முதலில் வெளியான படம் பாலா இயக்கிய வணங்கான். அருண் விஜய் மிரட்டலான நடிப்பு, திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த 10ஆம் தேதியே வெளியாகியிருக்கும் வணங்கான் இதுவரை 7 நாள்களில் ரூ. 6.38 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் ரிலீஸாக தமிழில் வந்த படங்களில் மதகஜராஜாவுக்கு பிறகு வசூலில் கலக்கி வரும் படமாக ரவி மோகன் - நித்யா மேனன் நடித்த காதலிக்க நேரமில்லை படம் இருந்து வருகிறது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரொமாண்டிக் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். படம் பொங்கல் நாளான ஜனவரி 14ஆம் தேதி வெளியான நிலையில் மூன்று நாள்களில் ரூ. 4.96 கோடி வசூலித்துள்ளது.

இந்த படங்கள் தவிர சிறுபட்ஜெட் படமான மெட்ராஸ்காரன் ரூ. 0.68 கோடி, விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா படம் ரூ. 0.57 கோடி வசூலித்துள்ளன.

வசூலில் தடுமாறும் கேம் சேஞ்சர்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் வெளியாக ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை ரூ. 164.8 கோடி வசூலித்துள்ளது. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்த படத்துக்கு முதல் மூன்று நாள்கள் கிடைத்த ஓபனிங் அடுத்தடுத்த நாள்களில் குறைந்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கடும் சரிவை கண்டுள்ளது. அத்துடன் படத்துக்கு தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வருவதால் போட்ட பட்ஜெட்டை கூட தாண்டுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.