Bose Venkat: கங்குவா தோல்வி.. ‘டேய் சூர்யா..ஏய் சிவா’ என்று விமர்சனம்; நாக்கைப்பிடுங்குவது போல கேட்கணும்’ - போஸ் வெங்கட்
Bose Venkat: கங்குவா திரைப்படம் பார்த்துவிட்டு ஒருவர் வருகிறார். மைக் முன்னர் வந்தவுடன்.. டேய் சூர்யா ஏய் சிவா என்று பேச ஆரம்பிக்கிறார், அவருக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது. - போஸ் வெங்கட்

Bose Venkat: இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் எஸ் எஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் ‘கங்குவா’ படத்தின் தோல்வி குறித்து பேசி இருக்கிறார்.
விவாதமாக மாறும்
இதுகுறித்து அவர் பேசும் பொழுது,' ‘கங்குவா’ ‘விடுதலை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு நான் கொடுக்கும் முதல் நேர்காணல் இது; அந்த சமயத்தில் என்னிடம் பல பேர் நேர்காணல்கள் கேட்டார்கள்; ஆனால் நான் கொடுக்கவில்லை. காரணம், என்னவென்றால் அன்றைய தினம் நான் எது பேசி இருந்தாலும் அது விவாதப்பொருளாக மாறி இருக்கும்.
நான் பேசிய பேச்சு பரவலாக பேசப்படும் பொழுது, நாளையும் இன்னொன்று அதே போல பேசலாம் என்று நினைப்பவன் நான் அல்ல. என்னுடைய விவாதம், தேவைக்கு நியாயத்திற்கு மட்டுமே இருக்கும். சும்மா பேர் வாங்குவதற்காக நான் விவாதம் செய்வதில்லை. நானும் எல்லோர் போல சாதாரண மனிதன்தான். ஆனால், இங்கு கேட்க வேண்டிய விஷயங்கள் என்று சிலவை இருக்கின்றன. அந்த விஷயங்களை நாம் எப்படி கேட்க வேண்டும் என்றால், நாக்கை பிடுங்கிக் கொள்வது போல கேட்க வேண்டும்.