HBD Writer Sujatha: சினிமாவிலும், இலக்கியத்திலும் முத்திரை பதித்த சுஜாதா பிறந்தநாள் இன்று
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Writer Sujatha: சினிமாவிலும், இலக்கியத்திலும் முத்திரை பதித்த சுஜாதா பிறந்தநாள் இன்று

HBD Writer Sujatha: சினிமாவிலும், இலக்கியத்திலும் முத்திரை பதித்த சுஜாதா பிறந்தநாள் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 03, 2024 05:45 AM IST

வாசிப்பு மீது தமிழ் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதில் சஜாதாவின் பங்களிப்பு மிகவு‌ம் முக்கியமானவை. தமிழ் சினிமாக்களில் இவரது வசனங்கள் சில காலத்தால் அழியாதவையாக உள்ளது.

எழத்தாளர் சுஜாதா பிறந்தநாள் இன்று
எழத்தாளர் சுஜாதா பிறந்தநாள் இன்று

தமிழ் சினிமா, தமிழ் இலக்கிய உலகில் என இரண்டிலும் தனது படைப்புகளால் முத்திரை பதித்தவர் சுஜாதா. இலக்கியத்தில் தனது வித்தியாசமான எழுத்துகளாலும், சினிமாக்களின் தனித்துவமான திரைக்கதை, வசனம் போன்றவற்றால் தனக்கென ரசிகர் மற்றும் வாசகர் கூட்டத்தை கொண்டவராக உள்ளார்.

சுஜாதா டச்

புத்தக வாசிப்பு பழக்கம் மக்களிடையே அதிகரிக்க காரணமாக இருந்ததில் சுஜாதாவின் எழுத்து முக்கிய பங்களிப்பை ஆற்றியது என்றே கூறலாம்.

எளிமையான எழுத்து நடையில் சிறுகதை, புதினங்கள் பன்றிக்கு எழுதியதோடு சுவாரஸ்ய திருப்புமுனைகள் என வாசகர்கள் மத்தியில் என்னத்தை ஏற்படுத்தியிருப்பார். வசந்த், ரமேஷ், சுரேஷ் போன்ற இவரது கதைகளின் கதாபாத்திரங்கள் 80ஸ் கால டிரெண்ட் ஆகவே இருந்தன. இவரது கதாபாத்திர வர்ணிப்புகள் சுஜாதா டச் என்றே அழைக்கப்பட்டது.

இவரது தனிப்பட்ட நடை மற்றும் சயின்ஸ் ஃபிக்சன் கதைகள் அறிவியலை மக்களிடம் எளிதாக கொண்டு சென்றது.

சுஜாதா என்றாலே தொழில்நுட்பங்கள் குறித்து அதிகம் எழுதுபவர் என்ற அடையாளமும் உண்டு. இவரது காலத்தில் இருந்த தொழில்நுட்பத்தையே கலக்கலான கதைக்களமாக்கியவர்.

இந்த தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயம், தொழில்நுட்ப புரட்சி மற்றும் அறிவியல் எழுத்து புரட்சிக்கும் போட்டியே நடந்திருக்கும்.

சுஜதாவின் முதல் கதை 1953ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது. அப்போது துவங்கிய எழுத்துப்பணிகள் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், கட்டுரைகள், திரைப்பட கதை வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பலவற்றிலும் விரவியிருந்தது.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களுக்கு புரியும் வகையில் அவர்களிடம் கொண்டு சென்றார். இதனால் மக்களுக்கு அறிவியல் என்பது எளிதானது. இதனால் அவருக்கு 1993இல் தேசிய அறிவியல் தொழில்நுட்பக்கழகம் விருது வழங்கியது. இவிஎம் இயந்திரத்தை உருவாக்க காரணமாக இருந்ததற்காக, அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. அவரது எழுத்துப்பணிக்காக தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது.

சுஜாதா ஆன கதை

இவரது கதைகள் ரங்கராஜன் என்ற பெயரில் பிரசுரமாகி வந்த காலத்தில் அங்கு ரா.கி.ரங்கராஜன் என்ற மற்றொருவரும் எழுதி வந்ததால், பெயர் குழப்பத்தை தவிர்க்க இவர் சுஜாதா ஆனார். சுஜாதா என்பது இவரது மனைவியின் பெயர். 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட்டான இவரை நீண்ட நாட்கள் பெண் என்ற கருதியவர் பலர் உண்டு.

அறிவியல், கணிப்பொறி, புதினம், சிறுகதை, இலக்கியம், தமிழ்ச் செவ்விலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். கவிதை தொகுப்பும் எழுதியுள்ளார். ஆதலினால் காதல் செய்வீர், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என இவரது புத்தகங்களை குறிப்பிட்டுக்கொண்டே செல்லலாம்.

இவர் தொடாதே பக்கங்களே கிடையாது என கூறுமளவுக்கு அவ்வளவு எழுதிவிட்டார். சிறுகதைகள் எழுதுவதில் மன்னன்.அதிலும் அறிவியல் புனைவு கதைகளை தமிழில் அனைவருக்கு புரியும் படி எழுதுவதில் கெட்டிக்காரர்.

தமிழ் சினிமாவில் சுஜாதா

இவர் எழுதிய பிரியா, காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ஆனந்த தாண்டவம் ஆகிய நாவல்கள் தமிழில் திரைமொழி கண்டன.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும் (1986-இல் வெளியான படம்) இவர் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டது.

எந்திரன், சிவாஜி, அந்நியன், ரோஜா, பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார் சுஜாதா. இவர் தயாரிப்பாளராக பாரதி, பாண்டவர் பூமி, லிட்டில் ஜான், நிலா காலம் ஆகிய படங்களை உருவாக்க உதவியிருக்கிறார்.

இதில் பாரதி படம், எழுத்தாளர் பாரதியாரின் வாழ்க்கை கதையை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.