Mansoor Ali Khan: மன்சூரின் எல்லை மீறிய பேச்சு; குஷ்பு வைத்த பொறி.. நடவடிக்கை எடுத்த ஆணையம்.. மன்சூர் மீது பாயும் வழக்கு
மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மன்சூர் அலிகான். அண்மைகாலமாக, காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அரசியல் தொடர்பாகவும், சினிமா தொடர்பாகவும், பொதுவெளியில் இவர் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைகளை சந்திக்கும்.
அந்த வகையில் அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர், “தற்போது உள்ள இயக்குநர்கள் கதாநாயகிகளிடம் நெருங்கி நடிக்க விடுவதில்லை. லியோ படத்தில் த்ரிஷாவை கற்பழிப்பது போன்ற காட்சி இல்லை. நடிகை த்ரிஷாவை, பழைய படங்களில் குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல, தூக்கிப்போட வாய்ப்பு கிடைக்கவில்லை”என்று பேசினார். இவரது பேச்சை நடிகை த்ரிஷா கடுமையாக கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாளவிகா மோகனன் உட்பட பலரும் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த மன்சூர் அலிகான், தான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நகைச்சுவையாக பேசியதை கோபம் ஏற்படுத்தும் வகையில் த்ரிஷாவிடம் சில நபர்கள் காண்பித்து இருப்பதாகவும் கூறினார். ஆனாலும், அந்த சர்ச்சை அடங்கியபாடில்லை.
போதாகுறைக்கு நடிகர் சங்கமும் அவருக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, நிச்சயமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டு இருக்கிறது. இது குறித்து மகளிர் ஆணையம் தன்னுடைய எக்ஸ் தளத்தில் “நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.
இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம். இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று”. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்