தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Bombay Jayashree : வசீகர குரலால் வசீகரா பாடலை பாடி அனைவரையும் வசியம் செய்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தநாள் இன்று!

HBD Bombay Jayashree : வசீகர குரலால் வசீகரா பாடலை பாடி அனைவரையும் வசியம் செய்த பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Feb 12, 2024 05:40 AM IST

இளையராஜா,ஏர்.ஆர் ரஹ்மான்,ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி அசத்திய பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தநாள் இன்று.

பாம்பே ஜெயஸ்ரீ
பாம்பே ஜெயஸ்ரீ

ட்ரெண்டிங் செய்திகள்

1982ஆம் ஆண்டிலிருந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்த பாம்பே ஜெயஸ்ரீ முதல்முறையாக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான தம்பதிகள் படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். இளையராஜா இசையில் அவர் பாடிய முதல் பாடல் 1994ஆம் ஆண்டு வெளியான வியட்நாம் காலனி படத்தில் இடம்பெற்ற கையில் வீணை ஏந்தும் பாடல் ஆகும்.

எம்.எஸ்.வி, இளையராஜா என்ற இரு இசை ஜாம்பவான்களுடன் ஆரம்பத்திலேயே பணியாற்ற ஆரம்பித்த பாம்பே ஜெயஸ்ரீ, ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இருவர் படத்தில் இணைந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற நறுமுகையே நறுமுகையே பாடல் அவருடைய குரலால் அடுத்த தளத்திற்கு சென்றது.

கெளதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மின்னலே படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலை பாடியதின் மூலம் பிரபலமானவர் பாடகி ஜெயஸ்ரீ. ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரது இசையமைப்பில் பல பாடல்களை பாடிய அவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார். குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் எகிடுதகிடு ஹிட் அடித்துள்ளன.

இளையராஜா,ஏர்.ஆர் ரஹ்மான்,ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாம்பே ஜெயஸ்ரீ பாடி உள்ளார். கஜினி படத்தில் இடம் பெற்ற சுட்டுவிழிசுடரே பாடல், பொல்லாதவன் படத்தில் மின்னல்கள் கூத்தாலும் மழைக்காலம் என பல ஹிட் பாடல்களை பாடி தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் பாம்பே ஜெய ஸ்ரீ.

ஹாரிஸின் இசையில் அவர் பாடிய, முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய், ஒன்றா ரெண்டா ஆசைகள், சுட்டும் விழி சுடரே, உயிரே என் உயிரே, பார்த்த முதல் நாளே, உனக்குள் நானே, யாரோ மனதிலே, செல்லமே செல்லம் என அவர் பாடிய பாடல்கள் அனைத்திலும் தனது குரலில் ஒரு மாயை நிகழ்த்தியிருப்பார்.

இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற நிலையில் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லண்டன் லிவர்பூல் நகர் ஹோட்டலில் தங்கி இருந்த அவர் ஹோட்டல் அறையில் இருந்து வெகுநேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்து, அவரது அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது, பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவை இழந்து,மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து, அவரை உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், அவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீரென உடலநலக் குறைவு ஏற்பட்டது. இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் தற்போது நலமாக இருக்கிறார் என தெரிவித்தனர்.

இளையராஜா,ஏர்.ஆர் ரஹ்மான்,ஹாரீஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி அசத்தியபாடகி பாம்பே ஜெயஸ்ரீ பிறந்தநாள் இன்று. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்