HBD Abhishek Bachchan: கவர்ச்சிகர ஆண்மகன்.. சூப்பர் ஸ்டார் மகன்.. உலக அழகி கணவன்.. அபிஷேக் பச்சனின் பிறந்தநாள் இன்று..
HBD Abhishek Bachchan: பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகனும் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

HBD Abhishek Bachchan: பாலிவுட்டை கான், கபூர் என சில குடும்பங்கள் தன் கைவசத்தில் வைத்திருக்கும் நிலையில், தனக்கென உச்ச ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார் அமிதாப் பச்சன். மக்களிடமிருந்து பிரிக்க முடியாத நிலைக்கு சினிமா சென்றதை அவர் இன்றும் தன் அசாத்திய நடிப்பால் இந்திய மக்களைக் கட்டிப்போட்டு வைத்துள்ளார்.
தந்தைக்காக படிப்பை விட்ட மகன்
அப்படிப்பட்ட அமிதாப்பின் ரத்தமான அபிஷேக் பச்சனும் தந்தையையும் தாயையும் பின்பற்றி சினிமாவில் நடிக்க வந்தார். இவர் நடிக்க வரும் முன், அமெரிக்காவில் படித்து வந்தார், அப்போது, அப்பாவின் தயாரிப்பு கம்பெனியை பார்த்துக் கொள்வதற்காக படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்தியா திரும்பினார். சில ஆண்டுகள் தயாரிப்பு கம்பெனியை பார்த்துக் கொண்ட அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் திரும்பியது.
பற்றிக் கொண்ட சினிமா ஆசை
பின் அவர் 2000ம் ஆண்டு ரெஃப்யூஜி (அகதி) எனும் படம் மூலம் திரைத்துறையில் நடிகராக காலடி எடுத்து வைத்தார். இந்தப் படத்தில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விருதும் பெற்றார். ஆனால், இவர் அடுத்தடுத்து நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியையே சந்தித்தன. இருந்தும் விடாமல் முயற்சித்த அபிஷேக் தூம் படத்தின் மூலம் மெகா ஹிட் கொடுத்தார்.
நிரூபிக்கப்பட்ட நடிகன்
இந்தப் படத்திற்கு பின், அடுத்தடுத்த ஹிட் கொடுத்த அபிஷேக், மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்து மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். அதுமட்டுமின்றி, தன்னை நடிப்பு அரக்கனாகவும் நிரூபித்தார்.
இருப்பினும், அபிஷேக் பச்சனால் அவரது அப்பாவைப் போல சிறந்த நடிகராக வர முடியவில்லை. இருப்பினும், மக்கள் விரும்பும் சிறந்த ஆண்மகன் போன்ற பட்டங்களை எல்லாம் பெற்று இளைஞர்களைக் கவர்ந்தார்.
நின்று போன நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தான் அமிதாப் பச்சன், தன் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அமிஷேக் பச்சனுக்கு கரி்ஷ்மா கபூர் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்தார். ஆனால், இந்த நிச்சயதார்த்தம் பின்னாளில் ரத்து செய்யப்பட்டது.
உலக அழகியே மனைவி
இதையடுத்து தான் அபிஷேக் பச்சன், உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராயை காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே பாலிவுட்டின் மிகவும் பிரபலமான தம்பதிகளாக மாறினர். பின் இவர்களுக்கு ஆராத்யா என்ற குழந்தை பிறந்தது.
வதந்திக்கு பதிலடி
பலரும் கண் வைக்கும் நிலையில் இவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், சில ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் தம்பதி பிரிய உள்ளனர், அவர்கள் தனித்தனியே வாழ்கின்றர், இவர்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என வதந்திகளை பரப்பி வந்தனர். இதெற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இத்தனை நாள் அமைதியாக இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது தன் கணவர் குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
பிறந்தநாள் வாழ்த்து
அதே சமயம், அபிஷேக் பச்சனின் ஐ வாண்டு டாக் படம் வெளியாக விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக மாறியுள்ளது. 2024ம் ஆண்டில் அதிகம் வதந்திக்கு உள்ளாக்கப்பட்ட தம்பதியாக இருந்த அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் தற்போது குடும்பத்துடன் தங்கள் நேரத்தை செலவழிக்கும் நிலையில், இது இப்படியே தொடரவும், 49வது பிறந்தநாளைக் கொண்டாடும் அபிஷேக் பச்சனுக்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்