HBD Riya Sen: “20 வயசு ஆர்வக்கோளாறு” செம குத்து.. பார்வையால் சொக்க வைக்கும் கண்ணழகி.. தமிழ் சினிமா கண்டெடுத்த நாயகி
HBD Riya Sen: தமிழ் சினிமா கண்டெடுத்த ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வரும் நடிகை ரியா சென், நிஜத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவராக உள்ளார். கூரான பார்வையால் ரசிகர்களை கவர்ந்த கண்ணழகியாக திகழ்ந்தார்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அரச குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்து தனக்கென பெயரும், புகழும் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரியா சென். இவரது தாயார் மூன் மூன் சென், பாட்டி சுசித்ரா சென் ஆகியோரும் பழம்பெரும் நடிகைகளாகவே உள்ளார்கள். அதேபோல் சகோதரி ரைமா சென்னும் நடிகையாக உள்ளார். அந்த வகையில் ரியா சென் குடும்பத்தை அரச பின்னணி கொண்ட கலைக்குடும்பம் என்றே கூறலாம்.
சினிமா பின்னணியை கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் தனது தாயார் மூன் மூன் சென் மகளாக, 5 வயதிலேயே சினிமாவில் தோன்றினார் ரியா சென். 1991இல் இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில் நடித்த ரியா சென் பின்னர் பெங்காலி படம் ஒன்றிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
தமிழ் சினிமா கண்டெடுத்த ஹீரோயின்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் பெயரும் புகழும் பெற்ற ஹீரோயின்களில் ஒருவராக ரியா சென் உள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது மகன் மனோஜ் குமாரை ஹீரோவாக அறிமுகப்படுத்திய காதல் காவியமான தாஜ்மஹால் படம் மூலம் ஹீரோயின் ஆனார் ரியா சென். மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருந்தாலும் தனது கண்களால் பார்ப்பவற்களை சொக்க வைக்கும் அழகியாக திகழ்ந்தார். இவரது கண்களின் அழகின் காரணமாகவே முதல் படத்தில் இவரது கதாபாத்திரத்துக்கு மச்சக்கன்னி என்ற பெயர் வைக்கப்பட்டிருந்து என்று கூறலாம்.
தாஜ்மஹால் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறந்த கிளாசிக் பாடல்களாக இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து பிரசாந்த் ஜோடியாக குட்லக் என்ற படத்தில் நடித்தார்.இதுவும் சரியாக போகாத நிலையில் ராசியில்லாத நடிகையானார்.
பாலிவுட் அறிமுகம்
இதையடுத்து பாலிவுட்டில் ஸ்டைல் என்ற படத்தில் அறிமுகமாகி, அந்த படத்தின் வெற்றியால் கவனம் பெற்ற நடிகையானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த ரியா சென், சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தமிழில் அரசாட்சி படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி கிளுகிளுப்பூட்டினார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இருபது வயது ஆர்வக்கோளாறு என்ற பெப்பியான இந்த பாடல் புஷ்பா படத்தின் ஊ சொல்றியா பாடலுக்கெல்லாம் முன்னோடி என்றே கூறலாம்.
இந்தி. பெங்காலி என மாறி மாறி நடித்து வந்த ரியா சென் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ஓடிடியிலும் ராஜ்ஜியம்
சினிமாவை போல் வெப்சீரிஸ்கள் பிரபலம் அடைந்த காலகட்டத்தில் இருந்த பல்வேறு வெப்சீரிஸ்களில் நடிக்க தொடங்கினார் ரியா சென். ஜீ5 ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆகும் பாய்சன், அமேசான் ப்ரைம் ஓடிடியில் இருக்கும் கால் மீ பே, ராகினி எம்எம்எம்: ரிட்டர்ன்ஸ் போன்றவை இவர் நடித்திருக்கும் பிரபலமான வெப் சீரிஸ்களாக உள்ளது.
அத்துடன் மியூசிக் விடியோ, டிவி விளம்பரங்கள், பேஷன் ஷோக்கள், போட்டோஷுட் என பம்பரமாக சுழலும் நடிகையாக இருந்ததோடு, சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.
காதலி கிசுகிசு டூ கல்யாணம்
பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாமை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டார் ரியா சென். பின்னர் அவரிடம் பிரேக் அப் செய்து விட்டு நடிகர் ஆஷ்மித் படேலுடன் உறவில் இருந்து வந்துள்ளார். அப்போது இவரது எம்எம்எஸ் விடியோக்கள் லீக்காகி பரபரப்பை கிளப்பின. அதேபோல் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காதலிப்பதாகவும் வதந்திகள் பரவின. யுவராஜ் சிங்குடன் ஜோடியாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றியும் உள்ளார். இதைத்தொடர்ந்து ஷிவம் திவாரி என்பவரை காதலித்து, கடந்த 2017இல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.
நடிப்பு தவிர கிக் பாக்சிங், கராத்தே தெரிந்த ரியா சென் பெயிண்டிங் வரைவதில் வல்லவராக இருந்துள்ளார். அதேபோல் சான்றிதழ் பெற்ற யோகா பயிற்சியாளராகவும் உளளார். தனது கண்களாலும், கூரான பார்வையாலும் பலரது மனங்களை கொள்ளை கொண்ட நடிகையாக இருந்து வரும் ரியா சென் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்