Urvashi Rautela: பகிரங்க மன்னிப்பு கேட்ட லெஜண்ட் சரவணாவின் ஹீரோயின்.. வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய பின் பரிகாரம்..
Urvashi Rautela: தன் மீது நெட்டிசன்களில் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சைஃப் அலிகான் மீதான கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.

Urvashi Rautela: மாடலும் நடிகையுமான ஊர்வசி ரவுத்தாலே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக காரணமாக அமைந்த படம் லெஜண்ட் தான். இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணாவுக்கு ஜோடி சேர்ந்து ஆடிய ஆட்டங்கள் எல்லாம் ரசிகர் என்றும் மறக்க முடியாதவையாக போனது. ஏனன்றால் அந்தப் படம் ஓடாமல் போனதற்கு லெஜண்ட் சரவணா மட்டுமின்றி அவருக்கு முதல் படத்திலேயே வரிசையாக வந்த கதாநாயகிகளும் அவர்கள் வாங்கிய சம்பளத்தையும் காரணமாக கூறினர்.
டாக்கு மகராஜ் வெற்றி
இந்நிலையில், தெலுங்கு நடிகர் பாலைய்யாவுடன் இணைந்து ஊர்வசி ரவுத்தாலே டாக்கு மகராஜ் படத்தில் நடித்துள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து ஆடிய தபிடி திபிடி பாடல் அதன் அசைவுகளுக்காவே வைரல் ஆனது. இதன்பின் படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பையும் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கொண்டாடிய ஊர்வசி ரவுதத்தாலே, நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவத்தை கிண்டல் செய்த சம்பவம் வைரலானது. இதுகுறித்து பலரும் ஊர்வசி ரவுத்தேலாவை விமர்சிக்கவும் கண்டிக்கவும் செய்ததால், அவர் இப்போது பகிரங்க மன்னிப்பை கோரியுள்ளார்.
மன்னிப்பு கேட்ட ஊர்வசி ரவுத்தேலா
சைஃப் அலி கான் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்த தீவிரம் தனக்கு தெரியவில்லை. அத்தகைய ஒரு தீவிரமான சம்பவம் நடந்த நேரத்தில், 'டாக்கு மகாராஜா' படத்தின் வெற்றியால் தனக்கு கிடைத்த பரிசுகளைப் பற்றி தான் பேசினேன். அந்தப் பிரச்சினையின் தீவிரத்தை தான் உணரவில்லை என்று கூறியுள்ளார்.
இப்போது உணர்ந்தேன்
பாலிவுட் நடிகை உர்வசி ரௌத்தேலா வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) வெளியட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "அன்புள்ள சைஃப் அலி கான் சார்.. உங்களிடம் மன்னிப்பு கேட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன்.
நீங்கள் சந்தித்த பிரச்சினையின் தீவிரத்தை இப்போதுதான் உணர்ந்தேன். 'டாக்கு மகாராஜா' படத்தின் வெற்றியின் மகிழ்ச்சியில், எனக்குக் கிடைத்த பரிசுகளின் உற்சாகத்தில், என்னை மறந்து அப்படி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டேன். அதற்காக வெட்கப்படுகிறேன்.
என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மீதான தாக்குதலின் தீவிரத்தை இப்போது புரிந்துகொண்டேன். அந்த நேரத்தில் நீங்கள் காட்டிய துணிச்சல் மிகவும் பாராட்டுக்குரியது" என்று உர்வசி எழுதியுள்ளார்.
ஊர்வசி ரவுத்தேலாவின் சர்ச்சை பேச்சு
முன்னதாக சைஃப் அலி கான் மீதான தாக்குதல் குறித்து உர்வசி ரௌத்தேலா தெரிவித்த கருத்து கடும் விமர்சனங்களை எழுப்பியது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசும்போது, தனது விரலில் இருந்த வைர மோதிரத்தைக் காட்டி, 'டாக்கு மகாராஜா' படத்தின் வெற்றியுடன் இணைத்துப் பேசினார்.
எனக்கு கிடைத்த பரிசு
"இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நேரம். இப்போது 'டாக்கு மகாராஜா' படம் ரிலீஸாகி ரூ.105 கோடி வசூலைக் கடந்துள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக என் அம்மா எனக்கு வைரங்கள் பதித்த ரோலக்ஸ் கடிகாரத்தை பரிசளித்தார். என் அப்பா இந்த கைக்கு இந்த மினி கடிகாரத்தை பரிசளித்தார்.
பயமாக உள்ளது
ஆனால், இவற்றை வெளியில் அணியும் நிலையில் நான் இல்லை.இதை அணிந்து செல்லும் போது, யாராவது நம் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பயம் தான் உள்ளது" என்று ஊர்வசி கூறினார்.
இவரது பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்தனர். தன்னிடம் விலை உயர்ந்த கடிகாரம் இருப்பதாக திருடர்களிடம் அவரே சொல்கிறார் என்று ஒருவர் கூற, இந்தப் பெண்ணுக்கு ஏதோ பிரச்சினை என்று மற்றொருவர் கூறினார். தன் மீதான விமர்சனங்கள் அதிகரித்ததால், உர்வசி ரௌத்தேலா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்