அடப்பாவமே.. கல்யாணமே பொய்யா? ஆனாலும் இந்த நடிகை பண்ணுனது எல்லாம் ரொம்ப ஓவர் தான்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடப்பாவமே.. கல்யாணமே பொய்யா? ஆனாலும் இந்த நடிகை பண்ணுனது எல்லாம் ரொம்ப ஓவர் தான்!

அடப்பாவமே.. கல்யாணமே பொய்யா? ஆனாலும் இந்த நடிகை பண்ணுனது எல்லாம் ரொம்ப ஓவர் தான்!

Malavica Natarajan HT Tamil
Dec 15, 2024 06:51 PM IST

தன் தனிப்பட்ட விஷயங்கள் மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிவரும் நடிகை டாப்ஸி பன்னு தன் திருமணத்தையே மறைத்துள்ளது தெரியவந்துள்ளது.

அடப்பாவமே.. கல்யாணமே பொய்யா? ஆனாலும் இந்த நடிகை பண்ணுனது எல்லாம் ரொம்ப ஓவர் தான்!
அடப்பாவமே.. கல்யாணமே பொய்யா? ஆனாலும் இந்த நடிகை பண்ணுனது எல்லாம் ரொம்ப ஓவர் தான்!

பிரபலமான நடிகை

தமிழில் ஆடுகளம், கேம் ஓவர், ஆரம்பம் அனபெல் சேதுபதி போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்ஸி பன்னு. இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து வந்தார்.

இதற்கிடையில், டாப்ஸி நெருங்கிய நண்பர்கள் சூழ கடந்த மார்ச் மாதம் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயே என்பவரை உதய்ப்பூரில் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம்

திருமணம் முடிந்த பின்பும் அதுதொடர்பான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிராமல் இருந்தார். மேலும். நடிகை என்பது எனது தொழில். நடிகையாக இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாது எண்ணுவது நியாயமில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், Agenda Aaj Tak 2024 எனும் நிகழ்ச்சியில் பேசிய டாப்ஸி, தனக்கு கடந்த ஆண்டே திருமணம் நடந்து விட்டதாகவும், சினிமாவில் நடிகையாக இருப்பதால் என்னைப் பற்றி தொடர்ந்து பேச்சுகள் வந்ததால் நெருங்கிய நண்பர்கள் சூழ மீண்டும் திருமணம் செய்துகொண்டோம் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டே திருமணம் முடிந்தது

இதுகுறித்து பேசிய டாப்ஸி பன்னு, என்னுடைய நீண்ட கால காதலரான பேட்மிண்டன் வீரர் மத்தியோஸ் போயேவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டேன்.

இதுகுறித்து நாங்கள் முறையான அறிவிப்பை வெளியிடாததால் இந்த ஆண்டு எனது திருமணம் குறித்து மக்களுக்கு தெரியாது. உண்மையில், நாங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமண ஆண்டு விழா விரைவில் வருகிறது. நாங்கள் சட்டப்படி தான் திருமணம் செய்தோம். இதை நான் இப்போது சொல்லவில்லை என்றால் யாருக்கும் தெரிந்திருக்காது.

நிறைய நாடகத்தை பார்த்துவிட்டேன்

எனது சினிமா வாழ்க்கையில் நான் தினம் தினம் நாடகத்தை பார்த்து வருகிறேன். அதனால், என் தனிப்பட்ட வாழ்க்கையில் அந்த நாடகங்களில் இருந்து ஒதுங்கி இருக்க நினைக்கிறேன் என்றும் கூறினார்.

நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தொழில் வாழ்க்கையை நுழைக்க விரும்பவில்லை. எங்கள் தொழில் வாழ்க்கையின் வெற்றிகளும் தோல்விகளும் தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்துவதால் இரண்டையும் தனித்தனியே கவனிக்க விரும்பினோம். இதற்காக பல முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் எனக் கூறினார்.

இருப்பினும், டாப்ஸி அதிகாரப்பூர்வமாக கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி உதய்பூரில் நண்பர்கள் படை சூழ திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.