Saif Ali Khan: கத்திக்குத்துக்குப் பின் வீடு திரும்பினார் சைஃப் அலி கான்.. நலமுடன் உள்ளதாக தகவல்..
Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், கத்திக் குத்து காயத்தில் இருந்து குணமடைந்த பின் தன் மனைவியுடன் வீடு திரும்பினார்.

Saif Ali Khan: பாலிவுட்டின் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர் சைஃப் அலி கான். 54 வயதான இவர், மும்பை பந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்த போது மர்ம நபர் ஒருவரால் கத்தியால் மிகவும் பலமாக குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.
நடிகரின் முதுகில் இருந்து எடுக்கப்பட்ட கத்தி
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு லீலாவதி மருத்துவமனைக்கு நடிகர் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். வியாழக்கிழமை அன்று சைஃப் அலி கான் அருகிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அன்று ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். கத்தியின் ஒரு துண்டு நடிகரின் உடலில் இருந்து எடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக தப்பினார்
இந்தத் தாக்குதலில் சைஃப் ஆறு காயங்களை அடைந்தார், அவற்றில் இரண்டு ஆழமான வெட்டுக்கள். வியாழக்கிழமை மருத்துவமனைக்கு வந்தபோது அவரது முதுகுத் தண்டுவட திரவம் கசிந்து கொண்டிருந்ததாக லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், எந்தவொரு கடுமையான காயங்களிலிருந்தும் அவர் தப்பித்தது அதிர்ஷ்டம். அவர் நன்றாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சைஃப் அலி கான் டிஸ்சார்ஜ்
அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு சைஃப் ஐந்து நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். நடிகர் ஆபத்திலிருந்து மீண்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் பந்த்ராவில் உள்ள தனது வீட்டிற்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டபோது, அவருடன் அவரது மனைவி நடிகை கரீனா கபூர் இருந்தார் என்றும் நடிகருக்கு நெருக்கமானவர்கள் ஹிந்துஸ்தான் டைம் பத்திரிகையிடம் உறுதிப்படுத்தினர்.
குற்றவாளி கைது
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஷெரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்ஜாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபக்கீர் (30) என்ற விஜய் தாஸ் நபர் கைது செய்யப்பட்டார்.
சைஃப் அலிகான் யார் எனத் தெரியாது
அவர், சைஃப் யார் என்று தனக்குத் தெரியாது என்றும், அந்த வீடு பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமானது என்று நினைத்து அதை குறிவைத்ததாகவும் குற்றவாளி கூறுகிறார்.நடிகரின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட முயன்று அவரது முதுகில் பலமுறை குத்தியதாக தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில், நடிகரின் ஃப்ளாட்டிற்குள் குளியலறை ஜன்னல் வழியாக திருட்டு நோக்கத்துடன் நுழைந்தார் என்றும், தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் பந்த்ராவில் உள்ள சைஃப் அலி கானின் ஃப்ளாட்டிலிருந்து தப்பிச் சென்று, கட்டிடத்தின் தோட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்தார் என்றும் போலீசார் கூறினர்.
கைரேகைகள் கண்டுபிடிப்பு
குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகைகள் குற்றம் நடந்த இடத்தில், அவர் நுழைந்து வெளியேறிய குளியலறை ஜன்னல், டக்ட் ஷாஃப்ட் மற்றும் அவர் டக்ட்டிலிருந்து நுழையப் பயன்படுத்திய ஏணி உட்பட பல இடங்களில் கைரேகைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் முன்னதாக தெரிவித்தனர்.
பங்களாதேஷில் உள்ள ஜலோகதி மாவட்டத்தைச் சேர்ந்த ஃபக்கீர், ஐந்து மாதங்களுக்கும் மேலாக மும்பையில் வசித்து வருகிறார், சிறிய வேலைகளைச் செய்து வந்த இவருக்கு ஒரு ஹவுஸ் கீப்பிங் ஏஜென்சியுடன் தொடர்பு உள்ளதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்