Saif Ali Khan: கத்திக்குத்துக்குப் பின் முதல்முறை.. பாதுகாப்பு வளையத்தில் சைஃப் அலிகான்..
Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் கத்திகுத்து சம்பவத்திற்கு பின் முதல்முறையாக பலத்த பாதுகாப்பிற்கு பின் வெளியே வந்துள்ளார்.

Saif Ali Khan: கடந்த ஜனவரி 16 ஆம் தேதி நடிகர் சைஃப் அலிகான் மீது பந்த்ராவில் உள்ள அவரது 11வது மாடிக் குடியிருப்பில் ஒரு அடையாளம் தெரியாத நபரால் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானார். இது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கத்திக்குத்துடன் மருத்துவமனையில் அனுமதி
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான், லீலாவதி மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கு அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின் வீடு திரும்பினார்.
பாதுகாப்பு வளையம்
இதையடுத்து சைஃப் அலிகான், ஜனவரி 26 இன்று அவரது இல்லத்திலிருந்து முதல் முறையாக வெளியேறினார். அவரைப் பின்தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. அப்போது சைஃப் அலிகானுடன் அவரது மனைவி கரீனா கபூரும் இருந்தார்.
வெளியான வீடியோ
நெட்டிசன்கள் சைஃப் அலிகான் வீட்டில் இருந்து வெளியே வந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். வீடியோவின் படி, சைஃப் அலிகான், தனது பந்த்ரா இல்லத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது. சாம்பல் நிற ஸ்வெட்ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்த கரீனா, சைஃப் முன் நடந்து சென்று காரில் ஏறினார். ஜீன்ஸ் மற்றும் நீல நிற சட்டை அணிந்த சைஃப், பாதுகாப்புப் படையினருடன் சூழப்பட்டிருந்தார். அவர்கள் இருவரும் காரில் ஏறி வெளியேறினர். இரண்டாவது கார் அவர்களது இல்லத்தின் வாயில்களில் இருந்து வெளியேறியது.
மருத்துவமனையில் அனுமதி
கத்திக்குத்து பட்டு லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சைஃப் அலிகானின் முதுகுத் தண்டுவட திரவம் கசிந்து கொண்டிருந்ததாக லீலாவதி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் ஐந்து மணி நேர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, அங்கு வந்த பிறகு ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். நடிகரின் உடலில் இருந்து கத்தியின் ஒரு துண்டு எடுக்கப்பட்டது.
கரீனா கபூர் வேண்டுகோள்
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தனியுரிமையைக் கோரி கரீனா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். “எங்கள் குடும்பத்திற்கு இது மிகவும் சவாலான நாளாக இருந்தது, மேலும் நடந்த நிகழ்வுகளை நாங்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளோம். அதிலிருந்து வெளிவர முயற்சிக்கிறோம்.
இந்தக் கடினமான காலத்தில் நாங்கள் செல்லும்போது, ஊடகங்களும் நெட்டிசன்களின் இடைவிடாத ஊகங்களையும் செய்திகளையும் தவிர்க்க வேண்டும் என்று நான் மரியாதையுடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் எழுதினார்.
குற்றவாளி கைது
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஷெரிஃபுல் இஸ்லாம் ஷெஹ்ஜாத் முகமது ரோஹில்லா அமீன் ஃபக்கீர் (30) என்ற விஜய் தாஸ் நபர் கைது செய்யப்பட்டார்.
சைஃப் அலிகான் யார் எனத் தெரியாது
அவர், சைஃப் யார் என்று தனக்குத் தெரியாது என்றும், அந்த வீடு பணக்காரர் ஒருவருக்குச் சொந்தமானது என்று நினைத்து அதை குறிவைத்ததாகவும் குற்றவாளி கூறுகிறார்.நடிகரின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட முயன்று அவரது முதுகில் பலமுறை குத்தியதாக தெரிவித்தார்.
போலீஸ் விசாரணையில், நடிகரின் ஃப்ளாட்டிற்குள் குளியலறை ஜன்னல் வழியாக திருட்டு நோக்கத்துடன் நுழைந்தார் என்றும், தாக்குதலுக்குப் பிறகு, அந்த நபர் பந்த்ராவில் உள்ள சைஃப் அலி கானின் ஃப்ளாட்டிலிருந்து தப்பிச் சென்று, கட்டிடத்தின் தோட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரம் ஒளிந்திருந்தார் என்றும் போலீசார் கூறினர்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்