Rishi Kapoor Memorial Day: இளம் வயதிலேயே அறிமுகமாகி சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் ரிஷி கபூர் நினைவு நாள்
Rishi Kapoor: 1970 ஆம் ஆண்டு தனது 18வது வயதில் தனது தந்தை ராஜ் கபூர் இயக்கிய "மேரா நாம் ஜோக்கர்" திரைப்படத்தில் நடிகராக ரிஷி கபூர் அறிமுகமானார். புதுமுகமாக இருந்தாலும், இளம் சர்க்கஸ் கலைஞராக ரிஷியின் நடிப்பு அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது.

ரிஷி கபூர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார், அவர் இந்தி படங்களில் பணியாற்றினார். 50 ஆண்டுகால வாழ்க்கையில் தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர்.
பிறப்பு
செப்டம்பர் 4, 1952ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்தார். இவர் பிறந்த ’கபூர்’ குடும்பம் பாலிவுட் சினிமாவை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. ரிஷி கபூரின் தந்தை, ராஜ் கபூர், ஒரு பழம்பெரும் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், மற்றும் அவரது தாத்தா, பிருத்விராஜ் கபூர், இந்திய நாடகம் மற்றும் சினிமாவில் ஒரு முன்னோடி நபராக இருந்தார். இப்படி திரையுலகில் ரிஷி கபூரின் வேர்கள் ஆழமாக வேறுன்றி இருந்தது.
1970 ஆம் ஆண்டு தனது 18வது வயதில் தனது தந்தை ராஜ் கபூர் இயக்கிய "மேரா நாம் ஜோக்கர்" திரைப்படத்தில் நடிகராக ரிஷி கபூர் அறிமுகமானார். புதுமுகமாக இருந்தாலும், இளம் சர்க்கஸ் கலைஞராக ரிஷியின் நடிப்பு அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், சினிமா உலகில் ரிஷி கபூரின் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.
அவரோடு இணைந்து பல வெற்றி படங்களில் நடித்த நீத்து சிங்கை 1980ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவரது மகன் ரன்பீர் கபூர் தற்போது பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
1973 ஆம் ஆண்டு வெளியான "பாபி" திரைப்படத்தில் தான் ரிஷி கபூர் உண்மையில் பாலிவுட் திரைக்கு வந்தார். உற்சாகமான டிம்பிள் கபாடியாவுக்கு ஜோடியாக, ரிஷி ராஜ் நாத் என்ற கவலையற்ற மற்றும் கலகக்கார இளைஞனாக நடித்தார். இத்திரைப்படத்தின் இளமை மற்றும் காதல் கதைக்களம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது, மேலும் லக்ஷ்மிகாந்த்-பியாரேலாலின் இசை படத்தை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்றது. ரிஷி கபூரின் வசீகரம் அவருக்கு நாடு முழுவதும் ரசிகர்களை உருவாக்கி "பாபி" என்று அன்று அழைக்க காரணமானது.
ரிஷி கபூர் தனது காதல் பாத்திரங்களுக்காக கொண்டாடப்பட்டாலும், அவர் தனது நடிப்பு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பல்துறைத்திறனை வெளிப்படுத்தினார், காதல் பாத்திரங்களில் இருந்து தீவிரமான நாடகங்கள், நகைச்சுவைகள் மற்றும் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று முக்கியத்துவம் கொடுத்து நடிக்கத் தொடங்கினார்.
மறைவு
துரதிர்ஷ்டவசமாக, ரிஷி கபூர் புற்றுநோயுடன் போராடி ஏப்ரல் 30, 2020 அன்று காலமானார். அவரது மரணம் உலகெங்கிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களின் இதயங்களில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது.
அவர் பெற்ற விருதுகள்
1970 – மேரா நாம் ஜோக்கருக்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது
1970 – பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகள்: மேரா நாம் ஜோக்கருக்கான சிறப்பு விருது
1974 – பாபி படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது.
2008 – பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது
2009 – சினிமாவுக்கான பங்களிப்புக்காக ரஷ்ய அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டது
2010 – லவ் ஆஜ் கல் படத்திற்கான துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான தயாரிப்பாளர்கள் கில்ட் திரைப்பட விருது

டாபிக்ஸ்