'என்ன பெரிய சூப்பர் ஹீரோ படம்.. எல்லா கதையும் இங்க இருந்து தான் போகுது'.. அசால்ட் காட்டிய அக்ஷய் குமார்..
ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் கதைகள் இந்திய புராணங்களில் இருந்து தான் எடுக்கப்படுகின்றன என பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

'என்ன பெரிய சூப்பர் ஹீரோ படம்.. எல்லா கதையும் இங்க இருந்து தான் போகுது'.. அசால்ட் காட்டிய அக்ஷய் குமார்..
அயர்ன் மேன், சூப்பர்மேன், பேட்மேன் மற்றும் ஸ்பைடர் மேன் போன்ற ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் தீவிர ரசிகரா நீங்கள்? அப்போது நடிகர் அக்ஷய் குமாரின் கருத்து உங்களுக்கு கொஞ்சம் ஷாக்காக தான் இருக்கும். அவர் அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
அக்ஷய் குமார் என்ன சொன்னார்?
அக்ஷய் குமார் சிவனாக நடித்துள்ள கண்ணப்பா படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நடிகர் அக்ஷய் குமார், பாலிவுட் ஹங்கமாவுடனான ஒரு நேர்காணலின் போது சில அதிரடி கருத்துகளை தெரிவித்து அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார். ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்கள் எல்லாம் இந்திய புராணங்களிலிருந்து உத்வேகம் பெறுகின்றன என அவர் பேசினார்.