HBD Abhishek: பாலிவுட் கியூட் ஸ்டார்.. அபிஷேக் பச்சன் பிறந்த நாள்
Abhishek Bachchan Birthday: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் இன்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
சினிமா என்பது இந்திய மக்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். பெரும் கூட்டமே இந்த துறையில் பணியாற்றினாலும் துறையில் ஜொலிக்கும் நாயகர்களே மக்களிடத்தில் கொண்டாடப்படுகிறார்கள். அப்படி பாலிவுட்டில் தற்போது வரை அசைக்க முடியாத இடத்திலிருந்து வருபவர் நடிகர் அமிதாப்பச்சன்.
தனக்கென உச்ச ரசிகர்கள் கூட்டத்தை இன்றும் தன் வசம் வைத்திருக்கிறார். அதே வழியில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் மச்சான்.
பாலிவுட் நடிகர்களின் முக்கிய அந்தஸ்தில் இருக்கும் இவர் 2000-த்தில் வெளியான அகதி என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பாலிவுட்டில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தனக்கென ஒரு தடத்தைப் பதித்து வைத்திருக்கிறார் அபிஷேக்.
அமெரிக்காவிற்குப் படிப்பதற்காகச் சென்ற அபிஷேக் பச்சன் தனது தந்தையின் ஏபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தன்னுடைய படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு திரைத்துறையில் களமிறங்கினார்.
முதல் திரைப்படத்திலேயே சிறந்த அறிமுக நாயகர் என்ற ஃபிலிம்பேர் விருதினை பெற்றார். மணிரத்தினம் இயக்கத்தில் ஆயுத எழுத்து திரைப்படத்தின் நேரடி பதிப்பான யுவா என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்புத் திறமை மக்களிடத்தில் பெயர் பெற்றது.
இதன் காரணமாக 4 ஆண்டுகளில் தொடர்ந்து 17 தோல்விப் படங்களை கொடுத்தார் அபிஷேக் பச்சன். 2004 ஆஅம் ஆண்டு அபிஷேக் பச்சன் நடித்த ‘தூம்’ படம் சூப்பர் ஹிட் ஆனது. தூம் திரைப்படத்தின் மூலம் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தேடிக்கொண்டார். மேலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ச்சியாக நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
2007 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு என்ற திரைப்படம் இவருடைய நடிப்புத் திறமைக்கு மிகப்பெரிய சான்றாக அமைந்தது. இந்த திரைப்படம் இவருக்குத் தனிப்பட்ட வெற்றியைக் கொடுத்தது.
அதன் பிறகு அபிஷேக் பச்சன் தனது தந்தையாரின் ஏ.பி.சி.எல் நிறுவனத்தின் செயலாக்கம் மற்றும் நிர்வாக செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
2002 ஆம் ஆண்டு அமிதாப்பச்சனின் அறுபதாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் கரிஷ்மா கபூர் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது. இவர்களுடைய நிச்சயதார்த்தம் 2003 ஆம் ஆண்டு முறிந்து போனது. 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இவர்களின் நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டது.
அதே வருடம் ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது வரை திரையுலக ரியல் ஜோடியாக இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.
யூ கேவின் ஈஸ்டர்ன் ஐ இன்று இதழ் 2006 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே கவர்ச்சிகரமான ஆண்மகன் என அபிஷேக் பச்சனை பாராட்டியது. திருமணத்திற்கு முன் இந்தியாவிலேயே தகுதி வாய்ந்த திருமணமாகாத ஆண்மகன் என டைம்ஸ் ஆப் இந்தியா இவரைப் பாராட்டியது. அதற்குப் பிறகு பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயை மணந்தார்.
தற்போது வரை தனது இளமை மாறாமல் அழகு நாயகனாகப் பாலிவுட்டில் வலம் வரும் அபிஷேக் பச்சன் இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த இளமை நாயகனுக்கு நமட் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்